டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 5 ஆம் தேதி 76.90 ஆக இருந்த நிலையில், இன்று அதன் மதிப்பு 77.42 ரூபாயாக குறைந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவை சந்தித்து வருவதையே இது உணர்த்துகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே தமது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
‘அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
பிரதமர் மோடி
தற்போது முதல்வராக இருந்திருந்தால், மத்திய அரசை தேச விரோத அரசு என்று சாடியிருப்பார்.
ஆனால் இப்போது அவரே பிரதமராக இருப்பதால் அமைதியாக இருக்கிறார்’ என்று மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார்.