வேளாண் இயந்திரமாக்கும் திட்டம்: மானிய விலையில் இயந்திரங்கள்!

வேளாண் பொறியியல் துறை மூலமாக வேளாண் இயந்திரமாக்கும் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கென வேளாண் கருவிகள் வாங்கி கொள்ள மானியம் வழங்கப்பட உள்ளது.

வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ், சிறு குறு விவசாயிகள், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கென ஒரு பிரிவிலும், இதர விவசாயிகளுக்கு மற்றொரு பிரிவிலும் டிராக்டர், பவர் டில்லர், நாற்று நடும் இயந்திரம், சூழல் கலப்பை, விதை தெளிப்பான், தென்னை மரம் ஏறும் கருவி என விவசாயத்தை எளிமையாக்கும் மேலும் சில கருவிகள் வேளாண் பொறியியல் துறையின் ஒப்புதல் பெற்ற நிறுவனங்களில் மானிய விலையில் வழங்கப்படும்.

புல்லட் டிராக்டர்

மானிய விலையில் வேளாண் கருவிகளை பெற விரும்பும் விவசாயிகள், தமிழக அரசினுடைய உழவன் செயலியில் தங்களின் ஆதார் எண்ணை முதலில் பதிவு செய்ய வேண்டும். இதற்கான விண்ணப்பம், அந்தந்த பகுதியில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில் வழங்கப்படும்.

விண்ணப்பத்தில் கேட்டப்படும் விவரங்களை பூர்த்தி செய்து வழங்கிய பின்னர், அவரது விண்ணப்பமானது மத்திய அரசினுடைய www.agrimachinery.nic.in எனும் இணையதளத்தில் இணைக்கப்படும். அதனை தொடர்ந்து விண்ணப்பித்த விவசாயிகளின் விவரங்கள் வேளாண் பொறியியல் துறையில் பதிவு செய்யப்பட்டு, துறையிலிருந்து இதற்கான அனுமதி வழங்கப்படும். விவசாயிகள் வாங்க நினைக்கும் கருவிகளின் முழுத்தொகையின் வரைவோலையை கொடுக்க வேண்டும். அதன் பின்னர் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வாங்கிய பின், வேளாண் துறை அலுவலர்கள் அதனை உறுதி செய்த பின்னரே, அதற்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் அனுப்பப்படும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.