1945ம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரைப் போல், இப்பொழுதும் வெற்றி நமதே: புடின்

மாஸ்கோ:உக்ரைனில் மாஸ்கோவின் ராணுவ நடவடிக்கை மேற்கத்திய கொள்கைகளுக்கு எதிராக சரியான நேரத்தில் சரியான திசையில் எடுக்கப்பட்ட என்று  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறினார்.உக்ரைனில் தனது நாட்டின் நடவடிக்கையை இரண்டாம் உலகப் போரில் சோவியத் நடத்திய போருடன் ஒப்பிட்டதாக  ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனி தோற்கடிக்கப்பட்ட 77 வது ஆண்டு நினைவு நாளில் முன்னாள் சோவியத் நாடுகளுக்கு வாழ்த்து தெரிவித்த புடின், 1945 ஆம் ஆண்டைப் போல், இப்பொழுதும் வெற்றி நமதே என்றும் சபதம் செய்தார்.

“இன்று, எங்கள் வீரர்கள், தங்கள் மூதாதையர்கள், நாஜி அசுத்தங்களிலிருந்து தங்கள் பூர்வீக நிலத்தை விடுவிக்க, 1945  ஆண்டில் நடத்திய போருக்கு வெற்றி கிடைத்ததை போல, வெற்றி நமக்கே கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், ரஷ்ய வீரர்கள் போராடுகிறார்கள்” என்று புடின் கூறினார். .

“இன்று, பல்வேறு நாடுகளின் மக்களுக்கு பல துன்பங்களை ஏற்படுத்திய நாசிசம் மறுபிறப்பு எடுப்பதை தடுப்பது நமது பொதுவான கடமை” என்று புடின் கூறினார்.

மேலும் படிக்க | உக்ரைன் போரின் தாக்கத்தை உணர்த்தும் மனம் பதற வைக்கும் காட்சிகள்

மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் துருப்புக்கள், டாங்கிகள், ராக்கெட்டுகள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளின் அணிவகுப்புக்கு தலைமை தாங்கி உரையாற்றிய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.

இதற்கிடையில், ரஷ்யப் படைகள் திங்களன்று உக்ரைன் மீதான தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தின, மாஸ்கோ அதன் வெற்றி தினத்தை கொண்டாடும் சமயத்தில், முக்கியமான தெற்கு துறைமுக நகரமான மரியுபோலைக் கைப்பற்ற முயன்றது.

ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதலை தொடங்கிய 11வது வாரத்தில் ரஷ்ய துருப்புக்கள் கடலோர எஃகு ஆலையைத் தாக்கின. அங்கு சுமார் 2,000 உக்ரேன் வீரர்கள் மரியுபோலைக் காப்பாற்றுவதற்கான கடைசி முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆக்கிரமிப்பாளர்களால் கைப்பற்றப் படாத நகரத்தின் ஒரே பகுதி  எஃகு ஆலை மட்டுமே. ரஷ்யா இதனை முழுமையாக கைப்பற்றி விட்டால்.  2014 இல் உக்ரேனிலிருந்து கைப்பற்றிய கிரிமியன் தீபகற்பத்திற்கு ஒரு நில வழித்தடத்தை ரஷ்யா ஏற்படுத்தி விடும் என்பதால், இந்த மரியுபோல் நகரம் முக்கியத்துவம் பெறுகிறது

இதற்கிடையில், இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனிக்கு எதிரான வெற்றியை நினைவுகூரும் உக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, திங்களன்று தனது நாடு ரஷ்யாவுடனான போரில் வெற்றி பெறும் என்றும் எந்தப் பகுதியையும் விட்டுக்கொடுக்காது என்றும் கூறினார்.

“நாசிசத்திற்கு எதிரான வெற்றி நாளில்,  எங்கள் வெற்றிக்காக போராடுகிறோம். அதற்கான பாதை கடினமானது, ஆனால் நாங்கள் வெற்றி பெறுவோம் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்று அவர் எழுத்துப்பூர்வ உரையில் கூறினார். “ஹிட்லர் எதிர்ப்புக் கூட்டணியில் உள்ள மற்ற நாடுகளுடன் சேர்ந்து நாசிசத்தைத் தோற்கடித்த எங்கள் முன்னோர்களைப் பற்றி நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என்றார்.

மேலும் படிக்க |  ரஷ்யா போரில் டால்பின்களை களம் இறக்கியுள்ளதா; அமெரிக்கா வெளியிட்டுள்ள பகீர் தகவல்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.