3200 பேருக்கு கொரோனா.. WFH-ல் குழப்பம்.. ஐடி ஊழியர்கள் நிலை என்ன..?!

கொரோனா, ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை சீனாவில் வேகமாகப் பரவி வரும் நிலையில் பல முக்கிய வர்த்தக நகரங்களில் தனது ஆஸ்தான ஜீரோ கோவிட் பாலிசியை நடைமுறைப்படுத்தியிருக்கும் காரணத்தால் ஷாங்காய் உட்படப் பல முக்கிய நகரங்கள் லாக்டவுனில் உள்ளது.

இதனால் சீனாவில் இருக்கும் நிறுவனங்கள் அனைத்தும் ஊழியர்களை மீண்டும் வீட்டில் இருந்தே பணியாற்ற உத்தரவிட்டு உள்ளது. இதேவேளையில் இந்தியாவில் கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

சிறு முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய 3 ஐபிஓ-க்கள்.. என்னென்ன நிறுவனங்கள்.. எப்போது?

இதனால் ஐடி ஊழியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

ஐடி துறை ஊழியர்கள்

ஐடி துறை ஊழியர்கள்

இந்தியாவில் பெரும்பாலான துறைகள், கல்லூரிகள், பள்ளிகள் கட்டுப்பாடுகளை நீக்கப்பட்டு முழுமையாக இயங்க துவங்கிய நிலையில் ஐடி துறை ஊழியர்கள் மட்டும் இன்னும் வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்றனர். ஐடி நிறுவனங்களும் பல்வேறு காரணமாக ஊழியர்களை முழுமையாக அலுவலகத்திற்கு அழைக்காமல் உள்ளது.

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

இந்தியாவில் தற்போது பல பகுதிகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையிலும் ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்து வருவது ஊழியர்கள் மத்தியில் கவலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.

கோவிட் தொற்று எண்ணிக்கை
 

கோவிட் தொற்று எண்ணிக்கை

இந்தியாவில் கோவிட் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதால், பல நிறுவனங்கள் காத்திருந்து, கண்காணித்து இதன் பின்பு ஊழியர்களை அழைப்பது குறித்து முடிவு எடுக்கத் திட்டமிட்டு உள்ளத. இன்னும் சில நிறுவனங்கள் ஊழியர்களை அழைப்பதற்கான இறுதி முடிவை எடுக்க மத்திய மாநில அரசு உத்தரவுக்காகக் காத்திருக்கிறார்கள்.

 டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ

டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ

இந்நிலையில் டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ ஆகிய முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களைப் பகுதி பகுதியா அழைத்து அனைத்து ஊழியர்களையும் ஹைப்ரிட் மாடலுக்குக் கீழ் கொண்டு வருவதில் உறுதியாக உள்ளது. இதனால் மீண்டும் 100% WFH என்பதற்கு வாய்ப்பு இல்லை.

ஹைப்ரிட் மாடல்

ஹைப்ரிட் மாடல்

மேலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்தாலும் ஐடி மற்றும் பிற கார்பரேட் நிறுவனங்கள் அரசு கூறும் விதிமுறைகளைப் பின்பற்றித் தொடர்ந்து ஹைப்ரிட் மாடலில் இயங்க முடிவு செய்துள்ளது.

கடைசி வாய்ப்பு

கடைசி வாய்ப்பு

இந்த வாய்ப்பை தவறவிட்டால் மீண்டும் அனைத்து ஏற்பாடுகளையும் முதலில் இருந்து துவங்க வேண்டி வரும் என்பதால் WFH முடித்துக்கொண்டு ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைப்பதில் மிகவும் உறுதியாக உள்ளது.

சிட்டிக்கு வரும் மக்கள்

சிட்டிக்கு வரும் மக்கள்

இதேபோல் ஊழியர்களை அழைப்பதில் ஒவ்வொரு நிறுவனம் தனக்கான பாணியைப் பயன்படுத்தும் நிலையில் சொந்த ஊரில் இருந்து பணியாற்றும் மக்கள் வேலை செய்யும் பெரு நகரங்களுக்கு வர துவங்கியுள்ளனர்.

காலி வீடுகள்

காலி வீடுகள்

குறிப்பாகப் பெரு நகரங்களில் முக்கியமான வர்த்தகப் பகுதிகளில் காலி வீடுகள் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்து வரும் நிலையில் அலுவலகத்தை விட்டுத் தூரத்தில் வாடகை வீட்டை பெறு வரும் நிலையும் உருவாகியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

New Covid Cases in India; 100% Work From Home or Wait-And-Watch Mode; Infosys, TCS decision

New Covid Cases in India; 100% Work From Home or Wait-And-Watch Mode; Infosys, TCS decision 3200 பேருக்கு கொரோனா.. WFH-ல் குழப்பம்.. ஐடி ஊழியர்கள் நிலை என்ன..?!

Story first published: Monday, May 9, 2022, 20:46 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.