டேராடூன்,-உத்தரகண்டில் உள்ள ஆறு ரயில் நிலையங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப் போவதாக மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
உத்தரகண்டில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ரூர்க்கி நகர ரயில் நிலைய கண்காணிப்பாளருக்கு சமீபத்தில் மர்ம நபர் ஒருவர் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘டேராடூன், ரூர்க்கி, ரிஷிகேஷ், ஹரித்துவார், நஜிபாபாத், லக்ஷர் ஆகியவற்றில் உள்ள ரயில் நிலையங்கள் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும்’ என கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, ஆறு ரயில் நிலையங்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. மேலும் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மிரட்டல் கடிதம் அனுப்பியவர் குறித்து விசாரணையும் முடுக்கி விடப்பட்டுஉள்ளது.உத்தரகண்டில் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய புனித தலங்களில், ‘சார்தாம் யாத்திரை’ துவங்கியுள்ளது. இந்நிலையில் பயங்கரவாத மிரட்டல் வந்துள்ளது.
டேராடூன்,-உத்தரகண்டில் உள்ள ஆறு ரயில் நிலையங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப் போவதாக மிரட்டல் கடிதம் வந்துள்ளது. உத்தரகண்டில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.