ஐபிஎல் போட்டிகளை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் செயலியில் நேரடி ஒளிப்புரப்பு செய்யப்படுகிறது. அதேசமயம், கிரிக்கெட் போட்டிகளை காண கட்டணம் செலுத்த வேண்டும். பயனர்களை சுமையை போக்கும் வகையில், சில தகவல் தொடர்பு நிறுவனங்கள் தங்களது ரீசார்ஜ் திட்டங்களுன் டிஸ்னி ஹாட்ஸ்டாரை இலவசமாக வழங்குகின்றன. அந்த வகையில், ஜியோ, ஏர்டெல் ஆகிய இரண்டு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு டிஸ்னி ஹாட்ஸ்டார் வசதி அடங்கிய புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றை இங்கே காணலாம்.
ஏர்டெல் புதிய திட்டங்கள்
ஏர்டெல் புதிதாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வசதி அடங்கிய ரூ399 மற்றும் ரூ839 ஆகிய 2 திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, ரூ399 திட்டம் 28 நாள்கள் வேலிடிட்டி கொண்டது. இதில், மூன்று மாதத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் வசதி கிடைக்கிறது. அவற்றை தனியாக வாங்க வேண்டும் என்றால் 149 ரூபாய் ஆகும். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் பிளானை ஒரு சாதனத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். அதிகப்பட்ச வீடியோ தரவு 480p வேர்ஷனில் இருக்கும்.
மேலும், வரம்பற்ற குரல் அழைப்புகளும், 100 எஸ்எம்எஸ் வசதியும், 2.5 ஜிபி டெய்லி டேட்டாவுக்கு கிடைக்கும். இதற்கு மாறாக, ரூ839 ரீசார்ஜ் திட்டத்தில் 84 நாள்கள் வேலிடிட்டியும், தினசரி டேட்டா 2 ஜிபியும், வரம்பற்ற குரல் அழைப்பும் கிடைக்கிறது.இதிலும், கூடுதல் பலனாக மூன்று மாத டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் பிளான் கிடைக்கிறது. இத்திட்டத்தில் 84 நாட்களுக்கு அவர்கள் விரும்பும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் சேனலுக்கான தொகுக்கப்பட்ட அணுகலும் கிடைக்கும். சோனி லிவ், லயன்ஸ்கேட் ப்ளே, ஈரோஸ் நவ், ஹோய் சோய் மற்றும் மனோரமா மேக்ஸ் ஆகியவையும் சேனல்களின் பட்டியல் ஆகும்.
ஜியோ ப்ரீபெய்டு திட்டங்கள் வித் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்
புதிய திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு டிஸ்னி+ஹாட்ஸ்டார் மொபைல் திட்டத்தின் மூன்று மாத சந்தாவை ஜியோ வழங்குகிறது. அதற்கு, வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருக்கும் திட்டங்களில் ஏதெனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்
ரீசார்ஜ் செய்ததும், டிஸ்னி ஹாட்ஸ்டார் செயலியில் அதே நம்பரை உபயோகித்து லாகின் செய்ய வேண்டும். மொபைலுக்கு வரும் ஓடிபி எண்ணை, பதிவிட வேண்டும். அவ்வளவு தான், லாகின் பிராசஸ் முடிவடைந்துவிட்டு, நீங்கள் கிரிக்கெட் போட்டியை லைவ்வில் காணலாம்.
ஜியோ ரூ333, ரூ151, ரூ583 மற்றும் ரூ783 திட்டங்களில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வசதியை வழங்குகிறது.
151 திட்டத்தில் 8ஜிபி டேட்டாவும், மூன்று மாத டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வசதியும் கிடைக்கிறது. மற்ற மூன்று திட்டங்களிலும் தினசரி டேட்டா 1.5ஜிபியும், வரம்பற்ற குரல் அழைப்பும், 100 மெசேஜ் அனுப்பும் வசதியும் கிடைக்கிறது. இதிலிருக்கும் ஒரே வித்தியாசம் திட்டத்தின் வேலிடிட்டி காலம் தான். 333 ரூபாய் திட்டம் 28 நாள்கள் வேலிடிட்டியும், ரூ583 திட்டம் 56 நாள்கள் வேலிடிட்டியும், ரூ783 திட்டம் 84 நாள்கள் வேலிடிட்டியுடனும் கிடைக்கிறது.
இதுதவிர ஜியோ வேறு ப்ரீபெய்டு திட்டங்களிலும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்குகிறது. ரூ499, ரூ555, ரூ601, ரூ799, ரூ1066, ரூ1499, ரூ4199 திட்டங்களில் கிடைக்கின்றன.
முக்கியமாக இதில் ரூ1499 திட்டத்திலும், ரூ4199 திட்டத்திலும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் பிரீமியம் சந்தா ஒரு வருடம் கிடைக்கிறது.
மற்ற திட்டங்களில் ஓராண்டிற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா கிடைக்கின்றன. பழைய திட்டங்களுடன் ஒப்பிட்டால், புதிய திட்டங்களில் மூன்று மாத மொபைல் சந்தா மட்டுமே கிடைக்கிறது.