சமூக வலைத்தளங்களின் மீதான மோகம் யாரை தான் விட்டு வைத்தது. பெரும்பாலானவர்களுக்கு ரீல்ஸ்,
டிக்டாக்
வீடியோ, யூடியூப் ஷார்ட்ஸ் ஆகிய தளங்களில் வீடியோக்களை பதிவேற்றாமல் தூக்கம் வருவதில்லை. அதற்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபித்திருக்கிறார் ஐரோப்பாவைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை ஒருவர்.
ஐரோப்பிய விண்வெளி மையத்தின் விண்வெளி வீராங்கனையான சமந்தா கிறிஸ்டோஃபோரெட்டி விண்வெளியில் இருந்து சமீபத்தில் ஒரு தனித்துவமான மற்றும் புதிரான வீடியோவை வெளியிட்டார். இவர்
SpaceX
விண்வெளி வீராங்கனை ஆவார்.
Satellite Internet: ஸ்பேஸ் எக்ஸ்-க்கு போட்டியாக களமிறங்கும் அமேசான் புராஜக்ட் குயிப்பர்!
விண்வெளியில் டிக்டாக்
ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி வீராங்கனையான சமந்தா கிறிஸ்டோஃபோரெட்டி, மே 5 அன்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து டிக்டோக் வீடியோவை வெளியிட்டு, விண்வெளியில் முதல் டிக்டோக்கராக மாறினார். ஏப்ரல் 27 அன்று, விண்வெளி வீரர் கிறிஸ்டோஃபோரெட்டி ஆறு மாதங்கள் தங்குவதற்காக புவி சுற்றுப்பாதையில் நிறுவப்பட்டிருக்கும் ஆய்வகத்தில் இறங்கினார்.
இவர் வெளியிட்ட வீடியோ சுமார் 88 வினாடிகள் நீளம் கொண்டதாக இருந்தது. இந்த வீடியோவில் ஜீரோ-ஜி பொம்மை மற்றும் எட்டா என்ற பொம்மை குரங்கை தனது குழுவிற்கு அறிமுகப்படுத்துகிறார். தொடர்ந்து அந்த குரங்கு பொம்மை குறித்து விளக்கமும் அளித்துள்ளார்.
‘Scimmietta’ என்பதன் சுருக்கம் தான் ‘ETTA’ என்று அவர் விளக்கினார். இது இத்தாலி மொழியில் “குட்டி குரங்கு” என்று அர்த்தம். மேலும், கிறிஸ்டோஃபோரெட்டி விண்வெளி நிலையத்திலிருந்து வெளியில் காண்பவற்றை தன்னை பின் தொடர்பவர்களுக்குக் காட்டினார்.
அதில் அவர், ஸ்பேஸ்எக்ஸின் Crew-4 பணியின் முதல் சில நாள்கள் விண்வெளியில் மிகவும் சிரமப்பட்டதாகக் கூறினார். தாங்கள் Crew-3 குழுவிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டி உள்ளது என்றும் விரைவில் இது சாத்தியமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வைரலான வீடியோ
இவர் வெளியிட்ட வீடியோ அதிக பார்வையாளர்களை ஈர்த்தது. இது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வைரலானது. இதுவரை இந்த வீடியோவை 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை கண்டுள்ளனர். மேலும், 8,000க்கும் அதிகமான லைக்குகளையும் இந்த வீடியோ பெற்றுள்ளது.
சமந்தாவுக்கு இது இரண்டாவது விண்வெளிப் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் முன்னதாக நவம்பர் 2014 முதல் ஜூன் 2015 வரை விண்வெளி நிலையத்தில் தனது பணிகளை மேற்கொண்டுள்ளார். அப்போது, கிறிஸ்டோஃபோரெட்டி உள்பட பல விண்வெளி வீரர்கள் தங்கள் விண்வெளிப் பயணங்களைப் பகிர்ந்துகொள்ள Twitter ஐப் பயன்படுத்தினர்.
இந்திய அணி வீரர்கள் மட்டும் இந்த HiTech Vest-ஐ அணிவது ஏன்?
யார் இந்த சமந்தா?
இத்தாலி நாட்டின் மிலனில் 26 ஏப்ரல் 1977 அன்று சமந்தா பிறந்தார். இவர் ஒரு இத்தாலிய ஐரோப்பிய விண்வெளி ஆவார். முன்னாள் இத்தாலிய விமானப்படை விமானியாவும், பொறியாளர் ஆகவும் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. ஐரோப்பிய விண்வெளி வீரரின் (199 நாட்கள், 16 மணிநேரம்) என்ற நீண்ட இடைவெளியில்லா விண்வெளிப் பயணத்திற்கான சாதனையை இவர் படைத்துள்ளார்.
அதுமட்டும் இல்லாமல், விண்வெளிக்குச் சென்ற முதல் இத்தாலியப் பெண்மணியும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 2021 இல், பொலிட்டிகோ நடத்திய கருத்துக்கணிப்பில், ஐரோப்பாவில் மிகவும் செல்வாக்கு மிக்க 28 நபர்களின் வருடாந்திர பட்டியலில் இவரது பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது.
மேலதிக செய்திகள்:
Jio 5G: ஜியோ 5ஜி வேகம் என்ன தெரியுமா மக்களே!
Facebook Reels: கிரியேட்டர்களுக்கு ஜாக்பாட் – மாதம் ரூ.3 லட்சம் வரை பேஸ்புக் ரீல்ஸில் சம்பாதிக்கலாம்!
ஓடவும் முடியாது… ஒளியவும் முடியாது – VPN நிறுவனங்களுக்கு புதிய விதிகள்!