‘அசானி’ என்ற கடுமையான சூறாவளியைக் கையாள இந்திய கடலோரக் காவல்படை தயார் நிலையில் உள்ளது.
மேற்கு-மத்திய மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் கடுமையான சூறாவளி புயல் ‘அசானி’, மேற்கு-வட-மேற்கு நோக்கி நகர்ந்ததாக சைக்ளோஜெனிசிஸ் குறிப்பிடுகிறது. இது மீண்டும் வடக்கு-வடகிழக்கு திசையில் வளைந்து வட ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரையை ஒட்டி வடமேற்கு வங்காள விரிகுடாவை நோக்கி நகர வாய்ப்புள்ளது.
இந்த நிலைமையை இந்திய கடலோர காவல்படை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. தடுப்பு நடவடிக்கைகளை தொடங்குவதற்காக கப்பல்கள் மற்றும் எண்ணெய் கையகப்படுத்தும் நிறுவனங்களுக்கு கடலோர காவல்படை மூலம் பாதுகாப்பு ஆலோசனை வழங்கப்படுகிறது.
அசானி சூறாவளி கரை ஒதுங்கியதும் மீட்புப் பணிகள் உட்பட எந்தவொரு பணியை செய்யவும் ஹெலிகாப்டர்களுடன் கூடிய இரண்டு கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நிறுத்தப்பட்டுள்ள கப்பல்கள் தங்குமிடம் மற்றும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
துறைமுக அதிகாரிகள், ஆயில் ரிக் ஆபரேட்டர்கள், கப்பல் போக்குவரத்து, மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மீனவர் சங்கங்கள் சூறாவளி உருவாகும் சாத்தியக்கூறுகள் குறித்து தெரிவிக்கப்பட்டு, படகுகள், கப்பல்கள் மற்றும் நிலையான தளங்களின் பாதுகாப்புக்கான நெருங்கிய தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பு பராமரிக்கப்பட்டு வருகிறது.
கூடுதலாக, கடலோர காவல்படை பேரிடர் நிவாரணக் குழுக்கள் (டிஆர்டி) மிதகை படகுகள், லைஃப்-பாய்கள் மற்றும் லைஃப் ஜாக்கெட்டுகள் பேரிடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தயார் நிலையில் உள்ளன.
மருத்துவக் குழுக்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் விரைவான அணிதிரட்டலுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
#BigBreaking || அசானி புயல் எதிரொலி : ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்.!#AsaniCyclone #Rain #RedAlert #IMD https://t.co/TgSL15ABNt
— Seithi Punal (@seithipunal) May 10, 2022