சென்னை:
ஒடிசா, ஆந்திராவை மிரட்டி வரும் அசானி புயல் காரணமாக தமிழகத்திலும் மழை பெய்து வருகிறது. சென்னையிலும் பல்வேறு பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்துள்ளது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
ஆந்திர மாநில கடற்கரையை நோக்கி நகர்ந்து வரும் அசானி புயல் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் அவ்வவ்போது லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்…
சென்னையில் ஒவ்வொரு வார்டிலும் ஒரு மருத்துவமனை- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்