போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான படம் வலிமை.
அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேய கும்மகொண்ட ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த படம்.
150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ம் தேதி திரைக்கு வந்தது.
திரைக்கு வந்த சீக்கிரத்தில் லாபம் ஈட்டிய ஆறு படங்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது பி.வி.ஆர்.
அதில் வலிமை ரூ. 105 கோடி வசூல் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Huge! #PVR, multiplexe major and the market leader in its Q4 results in FY2021-22 lists #AjithKumar’s #Valimai (₹105 Cr) as one of the 6 “blockbusters during the quarter resulting in swift recovery”.👇 pic.twitter.com/TlS7uRZHf2
— Sreedhar Pillai (@sri50) May 10, 2022
இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் 750 கோடி ரூபாய் வசூல் செய்து அந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
சர்ச்சையை ஏற்படுத்திய ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ 250 கோடி ரூபாய் வசூலானதாகவும், கங்குபாய் கதியவாடி என்ற இந்தி திரைப்படம் ரூ. 127 கோடியும், தெலுங்கு படமான பீம்லா நாயக் ரூ. 110 கோடி மற்றும் பிரபாஸ் நடித்த ‘ராதே ஷ்யாம்’ 104 கோடி ரூபாயும் வசூலானதாக குறிப்பிட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சுணங்கி கிடந்த திரையரங்குகள் மார்ச் மாதம் முதல் முன்னணி நடிகர்களின் பிளாக்பஸ்டர் படங்கள் மூலம் பாக்ஸ் ஆபீஸில் மீண்டும் வசூலை வாரி குவித்து வருவது இந்த அறிவிப்பு மூலம் தெரியவந்திருக்கிறது.