அனிருத் இசையில் பாடிய கமல்ஹாசன்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து, நடித்துள்ள படம் விக்ரம். இப்படம் ஜூன் 3ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வருகிற 15ம் தேதி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் விக்ரம் படத்தின் சிங்கிள் பாடல் மே 11ம் தேதி வெளியாகும் என்று அனிருத் அறிவித்திருக்கிறார். அதோடு இந்த பாடலை கமல்ஹாசனே எழுதி பாடி இருக்கிறார். தனது இசையில் முதன்முறையாக கமல்ஹாசன் பாடியது தனக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்ததாகவும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார் அனிருத். பத்தல பத்தல என்று இந்த பாடலின் முதல் வார்த்தை தொடங்குகிறது என்றும் அனிருத் குறிப்பிட்டுள்ளார் .