அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. ஜூலை மாதம் முதல் சம்பளம் உயரும்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வர உள்ளது. அகவிலைப்படி ஜனவரி மாதம் உயர்த்தப்பட்ட நிலையில் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் மீண்டும் உயரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில்லறை பணவீக்கம் அதிகரிப்பதைப் பொருத்து, அகவிலைப்படி பொதுவாக அண்டுக்கு இரண்டு முறை என ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படும்.

மாநிலங்களுக்கு இனி ஜிஎஸ்டி இழப்பீடு தேவையில்லை.. மத்திய அரசு முடிவு?

அகவிலைப்படி என்றால் என்ன?

அகவிலைப்படி என்றால் என்ன?

சில்லறை பணவீக்கம் அதிகரித்து விலை வாசி உயரும் போது, அரசு ஊழியர்கள் அதில் பாதிக்காத வகையில் இருக்க வழங்க இருப்பதே அகவிலைப்படி.

சில்லறை பணவீக்கம்

சில்லறை பணவீக்கம்

ஏப்ரல் மாதத்திற்கான சில்லறை பணவீக்கம் இந்த வாரத்தில் வெளியாக உள்ளது. பிப்ரவரி மாதம் 5.85 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம், மார்ச் மாதம் 6.1 சதவீதமாக அதிகரித்தது. உணவுப் பொருட்கள் விலை உயர்வே இதற்குக் காரணம் என கூறப்பட்டது. ஏப்ரல் மாதம் சில்லறை பணவீக்கம் 7 சதவீதமாக அதிகரித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

படி உயர்வு
 

படி உயர்வு

இப்படி பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதம் அகவிலைப்படி 34 சதவீதத்திலிருந்து 4 சதவீதம் அதிகரித்து 38 சதவீதமாக அறிவிக்க வாய்ப்புள்ளது.

7வது சம்பள கமிஷன்

7வது சம்பள கமிஷன்

மார்ச் மாதம் 7வது சம்பள கமிஷன் பரிந்துரை அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தி, 34 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. அதனால் 50 லட்சத்துக்கும் அதிகமாக அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியர்கள் பயனடைந்தனர்.

மத்திய அமைச்சகம்

மத்திய அமைச்சகம்

2022, ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சகம், அகவிலைப்படி மற்றும் நிவாரணத்தை 3 சதவீதம் உயர்த்தி 31 சதவீதமாக அறிவித்தது.

கொரோனா

கொரோனா

கொரோனா தொற்று பரவிய போது அதை சமாளிக்க, 2020, ஜனவரி மாதம், 2020, ஜூலை மாதம் மற்றும் 2021, ஜனவரி மாதம் வழங்க வேண்டிய அகவிலைப்படியை நிறுத்தியது. அதனால் மத்திய அரசுக்கு 34,402 கோடி ரூபாய் சேமிப்பு கிடைத்ததாகவும் சென்ற மாதம் மாநிலங்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து இருந்தார்.

அதன் பிறகு 2021, ஜூலை மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மீண்டும் வழங்கப்பட்டது. இப்போது அது 34 சதவீதமாக உள்ள நிலையில், ஜூலை மாதம் 38 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள்

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 2022 ஜனவரி மாதம் முதல் 34 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது. மத்திய அரசு உயர்த்திய பிறகு தமிழக அரசும் அதுகுறித்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Central Govt May Increase Govt Employees DA In July

Central Govt May Increase Govt Employees DA In July | அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. ஜூலை மாதம் மீண்டும் அகவிலைப்படி உயர்வு!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.