வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: பிரபல இசைக்கலைஞர் பண்டித் ஷிவ்குமார் மறைவுக்கு பிரதமர் மோடி, மேற்குவங்க முதல்வர் மம்தா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் பாரம்பரிய இசைக்கலைஞர்களில் ஒருவரான பண்டிட் ஷிவ்குமார் சர்மா,84 அடுத்த வாரம் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இவரது இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை எடுத்து வந்த நிலையில், இன்று காலை அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. மும்பையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஜம்முவில் 1938 இல் பிறந்த ஷிவ்குமார் சர்மா, ஜம்மு மற்றும் காஷ்மீரின் நாட்டுப்புற இசைக்கருவியான சந்தூரில் இந்திய பாரம்பரிய இசையை வாசித்த முதல் இசைக்கலைஞர் ஆவார். பத்ம விபூஷன் பெற்றவர்.
அவரது மறைவிற்கு பிரதமர் மோடி, விடுத்துள்ள இரங்கல் செய்தியில், அவருடனான எனது தொடர்புகளை நான் அன்புடன் நினைவில் கொள்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி என தெரிவித்துள்ளார்.மேலும் மம்தா பானர்ஜி, இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Advertisement