விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ்-ல் இந்திய பொறியாளர்களின் பங்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. பசுமை ஆற்றலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஐரோப்பிய பன்னாட்டு விண்வெளி நிறுவனமான, உலகின் முதல் பூஜ்ஜிய உமிழ்வு விமானத்தினை உற்பத்தி செய்யும் என தெரிவித்துள்ளது.
இந்த பூஜ்ஜிய உமிழ்வு விமானமானது 2035-க்குள் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ஏர்பஸ்-ன் பூஜ்ஜிய உமிழ்வு விமானத்தை உருவாக்குவதில் இந்திய பொறியாளர்களின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கலாம்.
இந்தியர்களின் பங்கு
ஹைட்ரஜன் நீராவியை மட்டுமே வெளியிடும் சுத்தமான எரிபொருள். ஆக இதனை எரிபொருளாக பயன்படுத்தும்போது இது கால நிலையில் முக்கிய தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பது ஏர்பஸின் கருத்து.
இந்த நிலையில் இப்படியொரு விமான உருவாக்கத்தில் இந்தியர்களின் பங்கு முக்கியமானது எனும் போது கவனிக்க வேண்டிய விஷயம் தானே. இந்திய பொறியாளர்கள், செயல்திறன் கணக்கீடுகளை ஆதரிப்பதற்கான முக்கிய அம்சங்கள், எரிபொருள் வடிவமைப்பிற்காக குளிரூட்டும் அமைப்புகள் மற்றும் பாதுகாப்பு குறித்த பகுப்பாய்வு என சிலவற்றில் முக்கிய பங்கு வகிப்பர்.
எதிர்காலத்திற்கு ஏற்ப தயாரிப்பு
நிலையான எதிர்கால விமான போக்குவரத்துக்கான விமானங்களை நாங்கள் தயார் செய்து வருகிறோம். தொழில் நுட்பம் மற்றும் பொறியியல் என்பது இதன் முக்கிய மையமாக உள்ளது என அதன் தலைமை தொழில் நுட்ப அதிகாரி சபின் கிளாக் தெரிவித்துள்ளார்.
டர்போபன் வடிவமைப்பு
ஏர்பஸின் மூன்று வெவ்வேறு கட்டமைப்புகளை திட்டமிட்டுள்ளது.
முதலாவது டர்போபன் வடிவமைப்பு. இது 200 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய திறன் கொண்டது. 2,000+ கடல் மைல்கள் வரம்பைக் கொண்டிருக்கும். இது கண்டம் விட்டு இயங்கும் திறன் கொண்டது, மேலும் அதன் இயந்திரம் ஹைட்ரஜனில் இயங்கும். .
டர்போபிராப் வடிவமைப்பு –
இது 100 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய திறன் கொண்டது. இதில் 1,000 கடல் மைல்களுக்கு மேல் பயணிக்க முடியும். இது குறுகிய பயணங்களுக்கான சரியான விமான தீர்வு மற்றும் ஜெட் எரிபொருளைக் காட்டிலும் ஹைட்ரஜனால் இயக்கப்படும்.
கலப்பு-சார் வடிவமைப்பு
200 பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடிய திறன் கொண்ட இந்த திட்டத்திலும், ஹைட்ரஜனை அதன் முக்கிய எரிபொருளாக கொண்டிருக்கும்.
பணியமர்த்தலை அதிகரிக்க திட்டம்
மேற்கண்ட இந்த பல்வேறு வடிவமைப்புகளின் பகுதிகளில் பெங்களூரு மையம் செயல்பட்டு வருவதாக கிளாக் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 1500 பொறியாளர்களை கொண்டுள்ள நிலையில், இந்த ஆண்டின் இறுதிக்குள் 2000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Airbus plans to increase 500 engineers in india this year
Airbus plans to increase 500 engineers in india this year/இந்தியாவில் 500 பேருக்கு வேலை.. ஐரோப்பிய நிறுவனத்தின் சூப்பர் அறிவிப்பு..!