இந்த ஆண்டுக்கான புலிட்சர் விருதுகள்- டேனிஷ் சித்திக் உள்ளிட்ட 4 இந்தியர்களுக்கு விருது

கொலம்பியா:
இதழியல், புத்தகம், நாடகம், இசைத்துறை சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் புலிட்சர் விருது வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் 2022 ஆண்டுக்கான புலிட்சர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 
இந்தப்பட்டியலில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் இந்தியாவை சேர்ந்த புகைப்படக்காரர்களான அட்னன் அபிதி, காஷ்மீர் பெண் புகைப்படக்காரரான சன்னா இர்ஷாத் மாட்டூ, அமித் தேவ் மற்றும் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட டேனிஷ் சித்திக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 
கொரோனாவின்போது உலகம் கண்ட கொடூரங்களை புகைப்படங்களாக பதிவு செய்ததற்காக ஃபீச்சர் புகைப்படங்கள் என்ற பிரிவில் விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் டேனிஷ் சித்திக் இந்தியாவில் கொரோனா 2வது அலையின்போது இறந்தவர்களை எரியூட்டும் காட்சிகளை படம் பிடித்ததற்காக இந்த விருதினை பெற்றார். 
புலிட்சர் விருது 2வது முறையாக டேனிஷ் சித்திக்கிற்கு தரப்படுகிறது. முதன்முறையாக ரோஹிங்கியா அகதிகள் தொடர்பாக டேனிஷ் சித்திக் எடுத்த புகைப்படங்கள் புலிட்சர் விருதை பெற்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.