சென்னை:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டசபையில் காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேசினார். அப்போது அவர் காவல் துறையில் 81 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் பேச்சு விவரம் வருமாறு:
*இரவு பணிக்கு செல்லும் போலீசார் முதல் இன்ஸ்பெக்டர் வரை உள்ளவர்களுக்கு சிறப்பு படி மாதம் ரூ.300 வழங்கப்படும்.
*வார விடுமுறை போலீசாருக்கு மட்டும் உள்ளது என்பதை இனிமேல் 15 நாட்களுக்கு ஒரு முறை சப்-இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும். இதன்மூலம் 10,508 பேர் பயனடைவார்கள்.
*மூன்றாவதாக இணைய தள சூதாட்டத்தில் ஈடுபட்டு தங்கள் உயிரை மாய்த்து கொள்வதற்கான காரணங்களை அறியும் பொருட்டு மாநில குற்றப்பிரிவு, குற்றப் புலனாய்வு துறை கண்காணிப்பாளர் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.