இந்தியா உடனடியாக ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பவேண்டும் என இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருள்களின் கடுமையான விலையேற்றத்தை தொடர்ந்து, இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் என அனைவரும் பதவி விலகவேண்டும் என மக்கள் போராடங்களில் குதித்தனர்.
இந்த போராட்டமானது நேற்று வன்முறையாக வெடித்ததை தொடர்ந்து மகிந்த ராஜபக்ச பதவி விலகிய போதிலும், அவரது குடும்பத்தின் வீடு உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அரசியல்வாதிகள் பலரின் வீடுகள் மற்றும் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இதையடுத்து, முன்னாள் பிரதமர் மகிந்த இன்று காலை குடும்பத்துடன் ஹெலிகாப்டரில் தப்பி சென்றதாக தகவல் வெளியாகி வருகின்றன.
PM Mahinda Rajapaksa’s ancestral home in Madamulluna has been set on fire. pic.twitter.com/JAN52w5Gxw
— DailyMirror (@Dailymirror_SL) May 9, 2022
இந்தநிலையில், இந்தியாவின் மூத்த அரசியல்வாதி மற்றும் பாஜகவின் மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி, இந்தியாவிற்கு எதிரான அன்னிய சக்திகள் இலங்கையில் வெடித்துள்ள வன்முறையை சாதகமாக பயன்படுத்துவதால் இலங்கைக்கு உடனடியாக இந்தியா தனது ராணுவத்தை அனுப்ப வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.
India must send in the Indian Army to restore Constitutional sanity. At present anti Indian foreign forces are taking advantage of people’s anger. This affects India’s national security
— Subramanian Swamy (@Swamy39) May 10, 2022
கூடுதல் செய்திகளுக்கு: பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இளவரசர் சார்லஸ்: பணவீக்க நெருக்கடியை தீர்க்க முடியாது போரிஸ் பேச்சு!
மேலும் இது இந்தியாவின் தேசிய பாதுகாப்பை பாதிக்கும் எனவும் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.