கொழும்பு: இலங்கையில் மக்கள் அமைதி காக்குமாறும், வன்முறையை நிறுத்துமாறும் அதிபர் கோத்தபய ராஜபக்சே வேண்டுகோள் விடுத்துள்ளார். பொருளாதார நெருக்கடியை தீர்க்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் எனவும், ஒருமித்த கருத்து மூலம் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.