இலங்கையில் ராஜபக்சே சகோதரர் பசில் வீட்டிற்கு தீவைப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கொழும்பு: இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து விலகிய மகிந்த ராஜபக்சேவின் சகோதரரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்சே வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர்.

இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது, பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் கொலை வெறித் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, நாடு முழுதும் கலவரம் மூண்டது. இதில், 130 பேர் காயம் அடைந்தனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலீசாருக்கு உதவ, ராணுவம் களம் இறக்கப்பட்டுள்ளது. நிலைமை கைமீறிப் போனதை அடுத்து, மகிந்த ராஜபக்சே, 76, பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். கலவரத்தில், ஆளுங்கட்சி எம்.பி., மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் பலியாகினர். மகிந்த ராஜபக்சே மற்றும் ஆளுங்கட்சி பிரமுகர்கள் பலரது வீடுகள் எரிக்கப்பட்டன. இந்த பிரச்னையில் 7 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

latest tamil news

பதவி விலகிய மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் திரிகோணமலை கடற்படை தளத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். அங்கிருந்து அவர்கள் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையறிந்த போராட்டக்காரர்கள், கடற்படை தளத்தை முற்றுகையிட்டுள்ளனர். பிரச்னைக்கு காரணமான அவர்களை கைது செய்ய வேண்டும் என கோஷம் போட்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

latest tamil news

இந்நிலையில், மேற்கு மாகாணத்தில் மல்வனை பகுதியில் உள்ள பசில் ராஜபக்சே வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

உயரதிகாரி மீது தாக்குதல்

இலங்கையில் காவல்துறை தலைமை பொறுப்பில் உள்ள சீனியர் டிஐஜி தேசபந்து தென்னகோன் ஜீப்பில் சென்றபோது பொதுமக்கள் தடுத்து நிறுத்தி தாக்கியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.