`உன் இதயத்துடிப்பையும், நீ உதைப்பதையும்' – `தாய்மை' என உருக்கமாகப் பதிவிட்ட நமீதா!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலருடன் நமீதா இணைந்து நடித்திருக்கிறார். அந்த சமயத்தில் நமீதா, வீரேந்திர சவுத்திரி என்பவரைக் காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு திருமணமும் நடந்தது. ‘எனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒருவருடன் இருப்பதை மிகப்பெரிய பாக்கியமாக கருதுவதாக’ தனது காதல் குறித்து ரசிகர்களிடையே நமீதா பகிர்ந்து கொண்டார். இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திடீரென பட வாய்ப்புகள் குறைய ஆரம்பிக்கவும் சினிமா, மீடியாவில் இருந்து ஒதுங்கியிருந்தார்.

நமீதா

இன்று நமீதாவின் பிறந்தநாள். அவருடைய பிறந்தநாள் அன்று தனது ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷமான தகவலை நமீதா பகிர்ந்திருக்கிறார்.

‘தாய்மை’ என பதிவிட்டு புதிய அத்தியாயம் தொடங்கியதும் நான் மாறினேன் என்றும் நாங்கள் விரும்பியதெல்லாம் இதற்காகத்தான் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், ‘உன் இதயத்துடிப்பையும், நீ மெதுவாக உதைப்பதையும் நான் உணர்கிறேன்!’ என்றும் நெகிழ்ச்சியாய் பதிவிட்டிருக்கிறார்.

நமீதா

நமீதா – வீரா தம்பதிக்கு பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.