பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) மற்றும் பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோர் நாட்டு மக்கள் மற்றும் பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக பிரத்யேகமாக இரணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளதால் வன்முறையை தவிர்த்து அமைதியாக இருக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சில் நேற்று (9) பிற்பகல் நடைபெற்ற சுருக்கமான ஊடகவியலாளர் சந்திப்பின் போது பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) அவர்கள் அமைதியை விரும்பும் அனைத்து இலங்கையர்களும் வன்முறை மற்றும் ஆத்திரமூட்டல்களில் இருந்து விலகியிருக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும் அனைத்து பொதுமக்களும் அனுபவிக்கும் பொருளாதார கஷ்டங்களை நாங்கள் அறிவோம். “நாங்கள் அனைவரும் இலங்கையர்கள், அவர்கள் எங்கள் சகோதரிகள், சகோதரர்கள், மகன்கள் மற்றும் மகள்கள் மற்றும் இதுபோன்ற தூண்டுதல்கள், தீ வைப்புத் தாக்குதல்கள் மற்றும் பொது மற்றும் தனியார் சொத்துக்களை அழிப்பது இந்த பிரச்சினைகளுக்கு எந்த தீர்வையும் கொண்டு வராது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு உதவுங்கள். இளைஞர்கள் மற்றும் முதியவர்களின் உயிர்களைப் பாதுகாக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், மேலும் நமது நாட்டின் இந்த தீர்க்கமான தருணத்தில் அமைதியாக இருந்து எங்களுக்கு உதவுமாறு உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன், ”என்று அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை, ஆத்திரமூட்டும் வன்முறைச் செயல்களில் ஈடுபடும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கும் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் ஊடகவியலாளர் சந்திப்பின் போது உரையாற்றுகையில் இந்த போராட்டங்கள் பல வாரங்களுக்கு முன்பு தொடங்கியதில் இருந்து நாட்டின் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கு இராணுவத்தினர் முழுமையாக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர்.”நாட்டில் அத்தியாவசிய சேவைகளை நாங்கள் எளிதாக்க வேண்டும், மேலும் பாதுகாப்பு படைகளுக்கு சேவைகளை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கி உதவுமாறு உங்கள் அனைவரையும் நாங்கள் மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். வன்முறையைத் தவிர்த்து, ஒழுங்கீன்மையாக நடந்து கொள்ளாமல் அமைதியைக் காக்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்கள் போராட்டங்கள் தொடர்பாக வேறு எதையும் செய்ய பாதுகாப்புபடைகள் இல்லை, ஆனால் நாங்கள் விரும்புவது சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க உதவுவதுதான். நமது நாட்டையும், நமது பொதுமக்களையும், பொதுச் சொத்துக்களையும் பாதுகாக்க நாங்கள் இருக்கிறோம். இதன் விளைவாக, அமைதியைப் பேணுவதற்கு பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க அவர்களுக்கு உதவுவதற்காக நாங்கள் கொழும்பு பகுதியில் இராணுவத்தை அனுப்பினோம். இந்த நேரத்தில், நாட்டில் உள்ள நமது புத்திசாலித்தனமான மற்றும் அமைதியை விரும்பும் குடிமக்கள் புத்திசாலித்தனமாக செயல்படுமாறும் கேட்டுக்கொள்கிறோம், மேலும் ஒரு நாடாக நாம் முன்னேற வேண்டியிருப்பதால், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதையும், பணியாளர்களுக்கு தீங்கு விளைவிப்பதையும் தவிர்க்க வேண்டும், ”என்று அவர் கூறினார்.
“பாதுகாப்பு படைகளுக்கு உதவுமாறும், வன்முறையில் இருந்து விலகியிருக்குமாறும் நான் மிகவும் பணிவாகவும் தனிப்பட்ட முறையிலும் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன், ஏனெனில் தீ வைப்பு, கொலை அல்லது சண்டைகள் மட்டுமே தற்பொழுது உள்ள பிரச்சினைகளை எந்த வகையிலும் தீர்க்காது. பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதி என்ற வகையில், நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் பொதுச் சொத்துக்களுக்கும் சிறந்த பாதுகாப்பை வழங்க நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்” என ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை இராணுவம்