கோமி கபூர்: காங்கிரஸ் ஒரு புதைகுழி என்ற எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், கட்சியை மறுசீரமைப்பதற்கான தனது திட்டத்தை பிரியங்கா காந்தி வதேரா ஆதரித்ததால், கிஷோர் நம்பிக்கையுடன் பாய்ச்சலுக்கு தயாராக இருந்தார். ஆனால், காந்தி குடும்பம் ஒற்றை தலைமையில் இயங்குகிறது என்ற பிரபலமான கருத்து தவறானது என்பதை அவர் தெரிந்து கொண்டார்.
காங்கிரஸுடனான பேச்சுவார்த்தை முறிந்த பிறகு, இன்னொரு அரசியல் கட்சிக்காக வேலை செய்வதை விட மக்களுடன் “நேரடி தொடர்பு” கொள்ளும் வகையில் தனது அடுத்த பரிசோதனை முயற்சி இருக்க வேண்டும் என பிரசாந்த் கிஷோர் முடிவு செய்தார். இதற்காக அவர் தனது சொந்த மாநிலமான பீகாரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். தனது முயற்சிக்கான வளமான பிரதேசமாக பீகார் அவருக்கு தோற்றமளிக்கிறது, நிதிஷ் குமாருக்கும் பாஜகவுக்கும் இடையேயான மோதல் மற்றும் தேஜஸ்வி யாதவ் இன்னும் தனது செல்வாக்கை நிரூபிக்கவிலை என்பது போன்ற இந்த சூழலில் பீகாரை அவர் தேர்வு செய்திருக்கிறார். பாஜகவுக்கு அகில இந்திய அளவில் ஒரே மாற்றாக இருக்கும் காங்கிரஸை மறைமுகமாகக் கட்டுப்படுத்தலாம் என்ற கிஷோரின் நம்பிக்கை, சமீபத்தில் காங்கிரஸ் தலைவர்களுடன் அவர் நடத்திய உரையாடலுக்குப் பிறகு சிதைந்து விட்டது. காங்கிரஸ் ஒரு புதைகுழி என்ற எச்சரிக்கை இருந்த போதிலும், கட்சியை மறுசீரமைப்பதற்கான தனது திட்டத்தை பிரியங்கா காந்தி வதேரா ஆதரித்ததால், கிஷோர் நம்பிக்கையுடன் பாய்ச்சலுக்கு தயாராக இருந்தார். ஆனால் காந்தி குடும்பம் ஒற்றை தலைமையில் இயங்குகிறது என்ற பிரபலமான கருத்து தவறானது என்பதை அவர் அறிந்து கொண்டார். கட்சிக்குள் பிரியங்கா முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவராக இல்லை. மேலும், கட்சியில் கிஷோரின் நிலை தெளிவற்றதாக இருக்கும் என்பதை ராகுலின் ஆலோசகர்கள் உறுதி செய்தனர். கிஷோரை உறுப்பினராகக் கொண்டு முன்மொழியப்பட்ட அதிகாரமளிக்கப்பட்ட நடவடிக்கைக் குழுவின் அரசியலமைப்பு அதிகாரம் இல்லாதது குறித்த பேச்சுவார்த்தைகளின் போது யதார்த்தத்தை அவர் புரிந்து கொண்டார். ராகுல் ஏற்கனவே ஸ்கூபா டைவிங் பயணத்திற்காக வெளிநாடு பயணத்துக்கு கிளம்பி விட்டார். அதைத் தொடர்ந்து திருமணத்திற்காக நேபாளத்திற்குச் செல்கிறார் என்பதை கிஷோர் பேச்சுவார்த்தையின் நடுவில் தெரிந்து கொண்டார். பிரியங்கா லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று விட்டார். காங்கிரஸில் செப்டம்பர் மாதத்திற்குள் ஒரு ‘புதிய’ கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும்போதுதான் கட்சியில் எந்த முறையான பதவியும் அளிப்பது குறித்து முடிவு செய்ய முடியும் என்று கிஷோருக்குத் தெரிவிக்கப்பட்டது.
நிதிஷ் வெளியேறினார்
பாட்னாவில் நம்பர் 1, அன்னே மார்க்கில் உள்ள முதல்வர் இல்லத்தில் இருந்து, 7, சர்குலர் ரோட்டில் உள்ள தனது பழைய வீட்டிற்கு நிதீஷ்குமார் மாறுவதாக சொல்லப்படுகிறது. இதனால், அவர் விரைவில் முதல்வர் பதவியில் இருந்து விலகக்கூடும் என்ற சலசலப்பு உருவாகி உள்ளது. வீடு சீரமைக்கப்படுகிறது என்று சாக்குப்போக்கு சொல்லப்படுகிறது முதலமைச்சரின் இல்லத்தில் இருந்த மாட்டு கொட்டகை எந்த வித மாற்றமும் செய்யப்படாத நிலையில் அங்கிருந்த 17 மாடுகளும் மாற்றப்பட்டது ஏன் என்பதை யாரும் விளக்கவில்லை. பாஜக தலைவர் ஒருவரை முதல்வராக நியமிக்க வேண்டும் என்று அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கோரத் தொடங்கியதில் இருந்தே பாஜக மீதான தனது அதிருப்தியை நிதீஷ் வெளிப்படுத்தி வருகிறார். இரு கட்சிகளும் ஏறக்குறைய ஒரே எண்ணிக்கையிலான இடங்களில் போட்டியிட்டாலும், 2020 சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம் 43 தொகுதிகளை வென்றது. ஆனால், பாஜக 74 தொகுதிகளை வென்றது என்பது அவர்களின் வாதமாக இருக்கிறது. . நிதிஷ் குமார் மத்திய அமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்டு டெல்லிக்கு செல்லலாம் அல்லது துணை ஜனாதிபதி வேட்பாளராக கருதப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், ஏற்கனவே ஆட்சியை காப்பாற்ற அணி மாறிய அனுபவம் வாய்ந்த நிதீஷுக்கு, பாஜகவின் சாடலை அதிகம் சிந்திக்காமல் அவை தேன் தடவிய வார்த்தைகள் என்று ஏற்றுக் கொள்கிறார். மசூதிகளில் ஒலிபெருக்கிகளுக்கு யோகி ஆதித்யநாத் தடைவிதித்ததை கடுமையாக விமர்சித்தார். பழைய போட்டியாளரான தேஜஸ்வி யாதவுடனான உரசல்களை சரி செய்தார். பொது சிவில் சட்டத்திற்கான எந்தவொரு முன்னெடுப்பதையும் விமர்சித்தார். 40-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் இல்லாமல் பீகாரில் ஆட்சி அமைக்க முடியாது என்பது அவரது துருப்புச் சீட்டு என்பது அவருக்குத் தெரியும்.
பாஜகவின் நால்வர் கொண்ட ஆர் அணி
சிவசேனாவை எதிர்த்துப் போராட, பாஜகவில் நான்கு பேர் கொண்ட குழு உள்ளது, அனைவரும் R என்ற ஆங்கிலத்தில் முதல் எழுத்தைத் தொடங்கும் பெயர்களைக் கொண்டுள்ளனர். ரானே (நாராயண்), ராணா (நவ்நீத்), ரணாவத் (கங்கனா) மற்றும் ராஜ் (தாக்கரே). இந்த ஆண்டு இறுதியில் மும்பையின் பிரஹன்மும்பை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெறுவதே பாஜகவின் நோக்கமாக உள்ளது.இது ஆளும் மகாராஷ்டிரா கூட்டணி அரசை முடக்கும். வட இந்தியர்கள் மற்றும் குஜராத்திகளின் ஆதரவு பாஜகவின் பலமாக உள்ளது. சிவசேனா மராத்தியர்களை நம்பியுள்ளது. அவுரங்காபாத்தில் ராஜ் தாக்கரே நடத்திய பேரணி பாஜகவின் முழு ஆதரவைக் கொண்டிருந்தது, ராஜ்தாக்ரேவின் கசப்பான இந்துத்துவா பிரச்சாரம் மற்றும் மசூதிகளில் ஒலிபெருக்கிகளைத் தடை செய்வதற்கான அழைப்பு ஆகியவை பாரம்பரியமான சிவசேனா வாக்குகளை பறிக்கக் கூடும் என நம்பப்படுகிறது. சாந்தகுணமுள்ள உத்தவ், தாராளவாதிகளின் ஒரு பிரிவினரின் அன்பானவராக மாறினார், அதே நேரத்தில் தனது கட்சியின் தீவிர ஆதரவாளர்களை அந்நியப்படுத்தினார். சேனாவின் இந்துத்துவா நற்சான்றிதழை மீட்டெடுக்க, ஆதித்யா தாக்கரே அயோத்திக்கு யாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார், மேலும் உத்தவ் பால் தாக்கரேவின் விருப்பத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் ஔரங்காபாத்தை சம்பாஜிநகர் என மறுபெயரிட விரும்புகிறார், ஆனால் அதற்கு காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவிக்கிறது. மாநகராட்சி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட காங்கிரசும் விரும்புகிறது.
ஒருமித்த ஆதரவை பெற திட்டம்
வரவிருக்கும் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு பாஜகவுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அல்லாத கட்சிகள் ஆதரவு தேவையில்லை, ஆனால் பிரதமர் நரேந்திர மோடி நடுநிலைக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதன் மூலம் ஒருமித்த தோற்றத்தைக் கொடுக்க விரும்புகிறார். ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குடனும், ராஜ்யசபா எம்பி ஜிவிஎல் நரசிம்மராவ் தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர் ராவையும், என்டிஆர் மகள் டி புரந்தேஸ்வரி ஆந்திர முதல்வர் ஜெகன் ரெட்டியையும் சந்திக்க உள்ளனர்.
மீண்டும் செய்திகளில்
“பாதுகாப்பு ஆபத்து” என்ற அடிப்படையில் நகைச்சுவையாளர் கௌதம் நவ்லகாவின் புத்தகத்தை சிறை அதிகாரிகள் அனுமதிக்க மறுத்தபோது எழுத்தாளர் பிஜி வோட்ஹவுஸ் மீண்டும் செய்தியில் இடம்பிடித்துள்ளார். ராஜ்யசபாவின் முன்னாள் பொதுச்செயலாளர் ஷம்ஷர் ஷெரிப், 1977 ஆம் ஆண்டு தனது UPSC நேர்காணலில் வோட்ஹவுஸை தனது விருப்பமான எழுத்தாளர்களில் ஒருவராக குறிப்பிட்டதால். அதிக மதிப்பெண்களைப் பெற்றதாக நம்புகிறார்.
அவரை நேர்காணல் செய்த புகழ்பெற்ற நிர்வாகி பத்ருதீன் தியாப்ஜி, சிரிப்புடன் பெரும் குரலில்,வோட்ஹவுஸ் புத்தகங்களில் அவருக்கு எது பிடித்தது என்ற கேள்விக்கான பதிலால் மேலும் அதிக உற்சாகமாகிவிட்டார். அவற்றைப் படித்த பிறகு, கதையை நீங்களே உருவாக்குவது சாத்தியமில்லை என்று ஷெரிப் விளக்கினார்.
தமிழில்: ரமணி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“