எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. பிக்சட் டெபாசிட் வட்டி அதிகரிப்பு!

எஸ்பிஐ என அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

எஸ்பிஐ வங்கி 2 கோடி ரூபாய் மற்றும் அதற்கு அதிகமான முதலீடு செய்யக் கூடிய திட்டங்களின் வட்டி விகிதம் உயர்த்தப்படுகிறது என்ற விவரத்தை தங்களது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

டாடா-வின் புதிய நெக்ஸான் மேக்ஸ்.. ஓரு சார்ஜில் 400 கிலோமீட்டர் மைலேஜ்.. விலை என்ன..?

ரெப்போ வட்டி விகிதம்

ரெப்போ வட்டி விகிதம்

ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 4.4 சதவீதமாகச் சென்ற வாரம் உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து வணிக வங்கி நிறுவனங்கள் ஹோம் லோன், வாகன கடன் உள்ளிட்ட கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்து வருகின்றன.மேலும் பல வங்கிகள் தங்களது பிக்சட் டெபாசிட் திட்டங்கள் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன.

ரெகுலர் பிக்சட் டெபாசிட்

ரெகுலர் பிக்சட் டெபாசிட்

எஸ்பிஐ வங்கி 7 முதல் 45 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டத்துக்கு 3 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கிறது. 46 முதல் 179 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டத்துக்கு 3.5 சதவீத வட்டி விகித லாபம் வழங்கப்படுகிறது. 180 முதல் 210 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டத்துக்கு 3.5 சதவீத வட்டி விகித லாபம் வழங்குகிறது. 211 முதல் 1 வருடம் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டத்துக்கு 3.75 சதவீத வட்டி விகித லாபம் வழங்குகிறது.

1 வருடம் முதல் 10 வருடம் வரை
 

1 வருடம் முதல் 10 வருடம் வரை

எஸ்பிஐ வங்கி 1 வருடம் முதல் 2 வருடம் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டத்துக்கு 4 சதவீத லாபம் வழங்குகிறது. 2 வருடங்கள் முதல் 3 வருடம் வரையில் டெபாசிட் செய்யும் போது 4.25 சதவீத லாபம் வழங்குகிறது. 3 முதல் 5 வருடம் வரையில் டெபாசிட் செய்ய 4.5 சதவீதம் லாபம் வழங்கியுள்ளது. 5 வருடம் முதல் 10 வருடங்கள் வரையில் 4.5 சதவீத லாபத்தை அளிக்கிறது.

அட்டவணை

அட்டவணை

 

Time Period SBI FD Interest Rates
7 to 45 days 3 per cent
46 to 179 days 3.5 per cent
180 days to 210 days 3.5 per cent
211 days to 1 year 3.75 per cent
1 year to 2 years 4 per cent
2 years to 3 years 4.25 per cent
3 years to 5 years 4.5 per cent
5 years to 10 years 4.5 per cent

மூத்த குடிமக்கள்

மூத்த குடிமக்கள்

மூத்த குடிமக்கள் எஸ்பிஐ பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்யும் போது மேலே கூறிய திட்டங்களை விட கூடுதலாக 0.50 சதவீத லாபத்தை அளிக்கிறது.

எப்போது முதல் உயருகிறது?

எப்போது முதல் உயருகிறது?

எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ள இந்த பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம் மே 10-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

SBI Hikes Interest Rates on Fixed Deposit From May 10

SBI Hikes Interest Rates on Fixed Deposit From May 10 | எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. பிக்சட் டெபாசிட் வட்டி அதிகரிப்பு!

Story first published: Tuesday, May 10, 2022, 16:26 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.