வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லண்டன்: ராணி இரண்டாம் எலிசபெத் வயது மூப்பு காரணமாக ஓய்வு பெற உள்ளதால் படிப்படியாக தனது பொறுப்புகளை இளவரசர் சார்லஸ் இடம் அளித்து வருகிறார் என கூறப்படுகிறது.
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்(96) வயது மூப்பு காரணமாக தனது அன்றாட பணிகளை மேற்கொள்ள சிரமப்படுகிறார். இதன் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக தனது அதிகாரத்தை இளவரசர் சார்லஸ் இடம் மாற்றி வருகிறார். இதன் முதல் படியாக ஆண்டுதோறும் பிரிட்டன் பாராளுமன்றத்தின் ஹவுஸ்ஸ் ஆஃப் லார்ட்ஸ் அவையில் நடைபெறும் திறப்பு விழாவில் இந்த ஆண்டு அவர் கலந்து கொள்ளவில்லை.
தனக்கு பதிலாக இளவரசர் சார்லஸ்-ஐ விழாவில் கலந்துகொள்ள அவர் வலியுறுத்தியுள்ளார். கடந்த 60 ஆண்டுகளாக ஆண்டுதோறும் நடைபெறும் நாடாளுமன்ற திறப்புவிழாவில் ராணி இரண்டாம் எலிசபெத் சிறப்புரையாற்றிய வருகிறார். இந்த நடைமுறை இந்த ஆண்டு தவிர்க்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 70 ஆண்டுகளாக ராணி இரண்டாம் எலிசபெத் பிரிட்டனின் நாடாளுமன்ற செயல்பாடுகளில் தனது பங்கினை சிறப்பாக ஆற்றி வரும் நிலையில் வயது மூப்பு காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக பொறுப்புகளை மகன் சார்லஸ் இடம் ஒப்படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Advertisement