பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தால், மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்தனர், ஆனால் அது நடப்பதாக தெரியவில்லை. பாகிஸ்தானில் பணவீக்கம் இதுவரை இல்லாத சாதனை அளவை எட்டியுள்ளது. CPI தரவுகளின்படி, பணவீக்க விகிதம் 13.4% ஐ எட்டியுள்ளது. பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், தற்போது பாகிஸ்தானின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. இந்த நிலைமை புதிய அரசாங்கத்திற்கு பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது.
பாகிஸ்தானில் மாவு, பருப்பு, பழங்கள், காய்கறிகள், பால், முட்டை உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 10 கிலோ மாவு விலை சுமார் 700 ரூபாய், ஒரு லிட்டர் பால் 180 ரூபாயை எட்டியுள்ளது. பாகிஸ்தானில் உணவுப் பொருட்களின் பணவீக்கம் 17%க்கும் அதிகமாக உள்ளது. மேலும், கடந்த 6 மாதங்களில் பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் சுமார் 28.6% அதிகரித்துள்ளது.
தற்போது, மிக மோசமான நிலையை பாகிஸ்தான் எட்டியுள்ளது. ஒரு கட்டத்தில், அமெரிக்கா மற்றும் சீனா இரண்டிற்கும் பிடித்தமான பாகிஸ்தானுக்கு இந்த மோசமான சூழ்நிலையில் எங்கிருந்தும் உதவி கிடைக்கவில்லை.
மேலும் படிக்க | பற்றி எரிகிறது இலங்கை; போராட்டக்காரர்களை தாக்கிய அரசு ஆதரவாளர்கள்
பாகிஸ்தானின் நிலைமையைக் கருத்தில் கொண்டு சீனா உதவி செய்வதை மறுத்துவிட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம், வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று சவுதி அரேபியாவிடம் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் வேண்டுகோள் விடுத்துள்ளார். நவம்பர் 2021 இல், பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பு 50 ஆயிரம் கோடியாகக் குறைந்தது. அப்போது இம்ரான் கான் அரசுக்கு சவூதி அரேபியா 6 மாதங்களுக்கு நிதியுதவி அளித்தது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் பாகிஸ்தானின் தரவுகளின்படி, மார்ச் 2021 இல் பாகிஸ்தானின் வெளிநாட்டுக் கடன் 116.3 அமெரிக்க டாலரை எட்டியது. 30 டிசம்பர் 2020 நிலவரப்படி, பாகிஸ்தான் மொத்தமாக $294 பில்லியன் வெளிநாட்டுக் கடனில் மூழ்கியுள்ளது. பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய், சமையல் எண்ணெய் மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றின் விலை உயர்வால் பாகிஸ்தான் பெரும் நெருக்கடியை சந்தித்து வருவதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் இந்த நிலைக்கு முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் அரசாங்கமே காரணம் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) அரசு நாட்டின் நான்கு ஆண்டுகளை வீணடித்துள்ளது என்று அவர் கூறினார். இவர்களின் தவறான கொள்கைகளால் வெளிநாட்டுக் கடன் சுமை தான் அதிகரித்துள்ளது என்றார்.
பாக்கிஸ்தான் புள்ளியியல் அலுவலகத்தின்படி, 2021-22 நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் (ஜூலை-மார்ச்) பாகிஸ்தானின் எரிசக்தி இறக்குமதி பில் 14.81 பில்லியன் டாலராக இருமடங்காக அதிகரித்துள்ளது. இது கடந்த 2021ஆம் ஆண்டில் 7.55 பில்லியன் டாலராக இருந்தது. அதிகரித்த இறக்குமதி காரணமாக, 22ஆம் நிதியாண்டின் தொடக்கத்தில் 13.17 பில்லியன் டாலர் இழப்பை பாகிஸ்தான் சந்தித்தது, இது கடந்த ஆண்டு 275 மில்லியன் டாலர் மட்டுமே. பொதுக் கடன், அந்நியச் செலாவணி கையிருப்பு குறைதல், பணவீக்கம் மற்றும் அரசாங்கக் கொள்கைகள் ஆகியவை பாகிஸ்தானின் மோசமான நிலைக்குப் பெரிதும் காரணமாகின்றன.
மோசமான பொருளாதார நிலை காரணமாக பாகிஸ்தானில் பெரிய திட்டங்கள் முடங்கியுள்ளன
பாகிஸ்தானின் நிலை மிகவும் மோசமாக உள்ளது, சீனாவுடன் (CPEC) மேற்கொள்ளப்படும் பல திட்டங்கள் இன்னும் முடிக்கப்படவில்லை அல்லது அவற்றின் பணிகள் முடங்கியுள்ளன. சீனாவின் கனவுத் திட்டமான சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தில் (சிபிஇசி) பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், பணிகள் முன்னேறவில்லை. இதுவரை 15 திட்டங்களில் மூன்று மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன.
மோசமான பொருளாதாரம் காரணமாக பாகிஸ்தானில் நடந்து வரும் இந்த திட்டங்கள் முடங்கியுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. CPEC உடன் தொடர்புடைய அதிகாரிகள், சில சமூக-பொருளாதார நன்மைகள் காரணமாக குவாடாரில் பணிகள் பின்தங்கியுள்ளன என்று கூறுகின்றனர்.
கடனில் மூழ்கியிருக்கும் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தானியர்களின் விலையுயர்ந்த பொழுதுபோக்குகள்
இன்றும் பாகிஸ்தானில் சொகுசு கார்களுக்கும், விலை உயர்ந்த வெளிநாட்டு மொபைல்களுக்கும் தேவை அதிகம். அதே நேரத்தில், பாகிஸ்தானில் வெளிநாட்டு சீஸ், வெண்ணெய், அழகுசாதனப் பொருட்களுக்கு பெரும் தேவை உள்ளது. பொதுமக்களின் இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற, பாகிஸ்தான் அரசு ஆண்டுதோறும் ஏராளமான ஆடம்பர பிராண்டு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும். பாகிஸ்தான் தடை விதித்தால், பெரிய அளவில் சேமிக்க முடியும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
மேலும் படிக்க | இலங்கையில் நீடிக்கும் கலவரம், தொடரும் பதற்றம்: அச்சத்தில் மக்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR