கடலூர்: வீட்டு மாடியில் பாதுகாப்பற்ற கருக்கலைப்புக்கு உள்ளாக்கப்பட்ட பெண் பத்திரமாக மீட்பு

சட்டவிரோதமாக வீட்டில் வைத்து கருக்கலைப்பு செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடலூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இணை இயக்குனர் ரமேஷ்பாபு தலைமையில் நடைபெற்ற ரகசிய ஆய்வில், அப்பெண் மீட்கப் பட்டுள்ளார். ஏற்கெனவே கடலூர் மாவட்டத்தில் மருந்தகத்தில் கருக்கலைப்பு செய்து கொள்ளும் முயற்சியில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், அதே மாவட்டத்தில் ஒரு வீட்டில் கருக்கலைப்பு செய்ய நடந்த இம்முயற்சி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
கடலூர் மாவட்டம் ராமநத்தம் கிராமத்தில் கடந்த 7.5.22 அன்று சட்டவிரோதமாக வேல்முருகன் என்பவரது மனைவி அனிதா கருக்கலைப்பு செய்தபோது உயிரிழந்திருந்தார். அதைத்தொடர்ந்து, அம்மாவட்டத்தின் பல பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் அதிகாரிகள். இதைத்தொடர்ந்து மங்களூ கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் வைத்து கருக்கலைப்பு நடைபெறுவதாக மாவட்ட மருத்துவம் ஊரக நலத்துறை இயக்குனர் ரமேஷ் பாபுக்கு வந்த தகவலின் அடிப்படையில் திடீர் ஆய்வு மேற்கொண்டுனர். இந்த நிலையில் மங்களூர் கிராமத்தில் குமார் என்பவரின் மனைவி சித்ரா வீட்டில் சட்டவிரோதமாக பெண்களுக்கு கருக்கலைப்பில் ஈடுபடுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திடீரென விரைந்து சென்று மருத்துவத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
image
அப்போது குமார் வீட்டில் மேல் மாடியில் உள்ள ஒரு அறையில் வைத்து ஒரு பெண்ணிற்கு கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து உட்கார வைத்திருந்தார்கள். அவரை மீட்டு பாதுகாப்பாக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர். பின்னர் மேற்கொண்ட விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த பரிந்தல் கிராமத்தை சேர்ந்த தினேஷ் என்பவரது மனைவி சத்தியா (வயது 23) என்பதும் ஏற்கனவே ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளதாகவும் தெரியவந்திருக்கிறது.
சமீபத்திய செய்தி:சிலரைத் திருப்தி செய்ய ஆன்மிகத்தை தம்பட்டம் அடிக்க வேண்டுமா அரசு?”- கி.வீரமணி அறிக்கை  https://bit.ly/3kWPycA
இதனையடுத்து மருத்துவத் துறையின் சார்பாக சிறுபாக்கம் காவல் நிலையத்தில் சட்டவிரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்ட குமார் அவரது மனைவி சித்ரா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்து சென்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.