கட்டுநாயக்க விமான நிலையம் அருகே குவிந்திருக்கும் மக்கள் அந்த வழியாக செல்லும் வாகனங்களை கவனமாக கண்காணித்து வருவதாக தெரியவந்துள்ளது.
மகிந்த மற்றும் குடும்பத்தார் வெளிநாட்டிற்கு தப்புகிறார்களா என்பதை கண்காணிக்க மக்கள் இவ்வாறான செயலில் ஈடுபடுகின்றனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும், பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக் காரணமாக, நெருக்கடி நிலை உக்கிரமடைந்ததை அடுத்து நேற்றையதினம் மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்திருந்தார்.
So, it is true that people check / screen every single vehicle before that enters Katunayake Airport. #SriLanka pic.twitter.com/fnQgIczona
— Kavinthan (@Kavinthans) May 10, 2022
இலங்கையில் கலவரம் வெடிக்கும் என்பதை கடந்தாண்டே கணித்த நபர்! வைரலாகும் பதிவு
அதனைத் தொடர்ந்து இன்றையதினம் அதிகாலை மகிந்த ராஜபக்ச அலரி மாளிகையை விட்டு வெளியேறியிருந்தார்.
இந்த நிலையில் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதையடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் நுழையும் ஒவ்வொரு வாகனங்களையும் அங்கு கூடியிருக்கும் உற்றுநோக்குகின்றனர்.
ராஜபக்ச விமான நிலையத்துக்குள் செல்கிறாரா என்பதை கண்காணிக்கவே இவ்வாறு செய்கின்றனர்.
இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.