காரைக்கால் சாலைகளுக்கு புதிய பெயர்| Dinamalar

புதுச்சேரி : காரைக்காலில் உள்ள முக்கிய சாலைகளுக்கு புதிய பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.அதன்படி, காரைக்கால் கடற்கரை சாலை- காந்தி சாலை, சீகல்ஸ் அமைந்திருக்கும் சாலை- வல்லபாய் பட்டேல் சாலை, காரைக்கால் கிழக்கு புறவழிச் சாலை- வ.உ.சி., புறவழிச்சாலை, நெடுங்காடு மேலகாசாகுடி சாலை- ப.சண்முகம் சாலை என புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளன.கடற்கரையில் அமைக்கும் பூங்காவிற்கு, பாரதி பூங்கா எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அமைச்சரவையின் அனுமதி கோப்பிற்கு, முதல்வர் ரங்கசாமி நேற்று கையெழுத்திட்டார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.