சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள உணவகங்களில் நடமாடும் உணவு பாதுகாப்பு ஆய்வகம் மூலம் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
50க்கும் மேற்பட்ட கடைகள், உணவகங்களில் இருந்து பரிசோதனைக்காக மாதிரிகளை சேகரித்த அதிகாரிகள், உணவுப் பொருள்களின் தரம் குறித்து செய்வதற்கு மதுரையில் இருந்து வந்துள்ள நடமாடும் உணவு பாதுகாப்பு ஆய்வகம் மூலம் அவற்றை பரிசோதித்தனர்.
அதில், கெட்டுப்போன இறைச்சியை விற்பனை செய்த உணவகத்திற்கும், காலாவதியான உணவு பொருட்களை இருப்பு வைத்திருந்த கடைக்கும் தலா 2000 ரூபாய் அபராதம் விதித்த அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.