காவல்துறைக்கு குட் நியூஸ்; சட்டப்பேரவையில் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள் இதோ…

Stalin announced important news for Police department in Tamilnadu assembly: 3000 புதிய காவலர்கள் செய்யப்படுவார்கள் என்றும், காவல்துறையினருக்கு விபத்து காப்பீட்டுத் தொகை ரூ. 60 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அந்த துறைக்கு பொறுப்பாக உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு,

3000 புதிய காவலர்கள் விரைவில் தேர்வு செய்யப்படுவார்கள்.

காவல்துறையினருக்கு இறப்பு, விபத்து பாதிப்பு காப்பீட்டுத்தொகை ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.60 லட்சமாக உயர்த்தப்படும்.

ஆளில்லா விமான அலகு காவல்படை பிரிவு ரூ.1.20 கோடி மதிப்பில் விரிவு செய்யப்படும்.

சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணித்து தக்க நடவடிக்கை எடுக்க “பருந்து” என்ற செயலி ரூ.33 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவுடன் இணைத்து “போதைப்பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவாக” சீரமைக்கப்படும்.

சென்னை அசோக் நகரில் செயல்பட்டு வரும் காவலர் பயிற்சிக் கல்லூரி, வண்டலூர் அருகே உள்ள உயர் காவல் பயிற்சியக  வளாகத்திற்கு மாற்றப்படும்.

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போர் இனி காவல்நிலையம் வரவேண்டியதில்லை என்ற நிலை ஏற்படுத்தப்படும்.

ரூ.6.47 கோடியில் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை பராமரிக்க போதுமான நிதி ஒதுக்கப்படும்.

காவல்துறையில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு நிச்சயம் கடைபிடிக்கப்படும்.

சமூக ஊடகங்களை கண்காணிக்க சமூக ஊடக மையம் அமைக்கப்படும்.

இதையும் படியுங்கள்: கட்டிட திட்ட வரைப்படம் காட்சிப்படுத்தப்பட வேண்டும்; சென்னை மாநகராட்சி உத்தரவு

திருவாரூர் முத்துப்பேட்டையில் ரூ12 கோடி செலவில் பயிற்சி காவலர்களுக்கான இல்லம் கட்டப்படும்.

சென்னையில் 3 மண்டலங்களில் போக்குவரத்து கண்காணிப்பு மண்டலங்கள் ஏற்படுத்தப்படும்.

காவலர்கள் மற்றும் தீயணைப்பு காவலர்கள் வீரர்களுக்கு இடர் படி உயர்த்தி வழங்கப்படும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.