வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி:டில்லியின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கி வரும் குதுப்மினார் பெயரை மாற்ற வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
இது குறித்து விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் செய்தி தொடர்பாளர் வினோத்பன்சால் கூறி இருப்பதாவது: தலைநகரில் தற்போது முக்கிய அடையாளமாக விளங்கி வரும் குதுப்மினார் கட்டப்படுவதற்கு முன்னர் அப்பகுதியில் ஜெயின் சமுதாயத்திற்கு சொந்தமான கோயில்கள் இருந்து வந்துள்ளது. அவற்றை இடித்து தள்ளப்பட்டு அதன் மூலம் கிடைத்த பொருட்களை கொண்டு குதுப்மினார் கட்டப்பட்டுள்ளது. எனவே குதுப்மினார் என்ற பெயரை விஷ்ணு ஸ்தம்பம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என கூறினார்.
இதே கருத்தை வலியுறுத்தி மஹாகல் மானவ் சேவா என்ற இந்து அமைப்பு மற்றும் ராஷ்டிரவாதி சிவசேனா அமைப்பை சேர்ந்தவர்கள் குதுப்மினார் அருகே போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே டில்லி பா.ஜ.,தலைவர்களில் ஒருவரான ஆதேஷ்குப்தா சமூக வலை தளத்தில் டில்லியில் உள்ள துக்ளக்சாலை, அக்பர் சாலை,அவுரங்கசீப் சாலை ஹூமாயூன்சாலை மற்றும் ஷாஜஹான் சாலை பகுதிகளின் பெயரை மாற்ற வேண்டும் எனவும் அதற்கு மாற்றாக மகா ராணா பிரதாப், குரு கோவிந்த் சிங், மகரிஷி வால்மீகி மற்றும் ஜெனரல் விபின் ராவத் ஆகியோரின் பெயரை கூறி இருந்தார் . ஆனால் சில மணி நேரங்களில் அந்த பதிவை நீக்கினார்.
Advertisement