நீலகிரி மாவட்டம் மசினகுடியில் குப்பைத் தொட்டியிலுள்ள உணவுக் கழிவுகளை ஒற்றை காட்டு யானை ஒன்று எடுத்து உண்ட காட்சி இணையத்தில் பரவி வருகிறது.
முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிவட்ட பாதையை ஒட்டிய வனப்பகுதி அருகே அமைந்துள்ளது மசினகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகேயுள்ள குப்பைத் தொட்டியில் இருந்து உணவுக் கழிவுகளை எடுத்து காட்டு யானை உண்டது. இதுபோல கழிவுகளை உண்ணும் பழக்கத்தால் காட்டு யானைகளுக்கு பாதிப்பு ஏற்படுமென வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.