சில பழங்களில் வைட்டமின் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சில சமயங்களில் ஃபுரூட் ஃபேஷியல் செய்து கொள்வதற்காகவே நாம் பெரும் தொகையை செலுத்துகிறோம்.
ஆனால் வீட்டிலேயே பளபளப்பான சருமத்தைப் பெற முடியும் எனில் அதை ஏன் செய்ய வேண்டும்? அழகான சருமத்திற்கு இந்த வீட்டில் தயாரிக்கப்பட்ட ஃபேஸ் பேக்குகளை இப்போது முயற்சிக்கவும்.
வாழைப்பழ ஃபேஸ் பேக்
வாழைப்பழம் சருமத்தை இளமையாகவும், புத்துணர்ச்சியுடனும் மாற்ற உதவுகிறது. மிருதுவான சருமத்திற்கு இந்த ஃபேஸ் பேக்கை முயற்சிக்கவும்.
எப்படி?
வாழைப்பழத்தை மசித்து முகம் மற்றும் கழுத்தில் தடவவும். நீங்கள் முகப்பரு மற்றும் பிக்மென்டேஷன் போன்ற தோல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், அதில் சிறிது தேன் சேர்க்கவும். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும்.
பப்பாளி ஃபேஸ் பேக்
டேனிங்-கு, இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கரும்புள்ளிகள் மற்றும் டேன் தோல், போன்றவை இருந்தால் இதை முயற்சிக்கவும்.
எப்படி?
ஒரு பழுத்த பப்பாளியை எடுத்து உங்கள் தோலில் மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு கழுவவும்.
வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்
வெள்ளரி வறண்ட சருமத்திற்கு சிறந்தது, இது குளிர்விக்கும் முகவராக செயல்படுகிறது.
எப்படி?
வெள்ளரிக்காயை அரைத்து சாற்றை முகத்தில் தடவவும். நீங்கள் கூழை பிரிட்ஜில் வைத்து அது குளிர்ந்தவுடன், டார்க் சர்கிள்ஸ்க்கு சிகிச்சையளிக்க ஐ-மாஸ்க் ஆக பயன்படுத்தலாம்.
கிவி ஃபேஸ் பேக்
உங்கள் முகத்தில் இயற்கையான பளபளப்பு வேண்டும் என்றால் கிவி மிகவும் நல்லது.
எப்படி?
கிவியை ப்யூரி செய்து அதனுடன் சிறிது தயிர் சேர்க்கவும். உங்கள் தோலில் சிறிது நேரம் மசாஜ் செய்யவும். 15 நிமிடங்களில் கழுவவும்.
தக்காளி ஃபேஸ் பேக்
தக்காளி சருமத்தை நிறமாக்கவும், இறுக்கமாகவும், பருக்களை குணப்படுத்தவும் உதவுகிறது.
எப்படி?
பழுத்த தக்காளியில் இருந்து 2 டீஸ்பூன் சாறு பிழியவும். அதனுடன் 3 டீஸ்பூன் மோர் பால் சேர்த்து நன்கு கலக்கவும். 30 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு கழுவவும்.
அழகான குளோயிங் சருமத்துக்கு உடனே இந்த ஃபேஸ் பேக் டிரை பண்ணுங்க!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“