கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகளில் பணம் பரிவத்தனை செய்யும் போது ஏற்படும் குளப்படிகளைப் புகார்களாகத் தெரிவிக்க வாட்ஸ்அப் எண்ணை டிஜி சாத்தி என்ற பெயரில் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா அறிமுகம் செய்துள்ளது.
இந்த டிஜி சாத்தி வாட்ஸ்அப் எண்ணைப் பயன்படுத்தி கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற செயலிகளில் பணம் அனுப்பும் போது ஏற்பட்ட குளறுபடிகள், வங்கி செயலிகளால் ஏற்பட்ட குளறுபடிகளையும் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்கள்.
சம்பளம், பதவி உயர்வில் துளியும் திருப்தி இல்லை.. கூகுள் ஊழியர்கள் பதிலால் சுந்தர் பிச்சை ஷாக்..!
வாட்ஸ்அப் எண்?
டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் போது ஏற்படும் குளறுபடிகளை +91 892 891 3333 என்ற எண் மூலம், டிஜி சாத்தி சேவையை வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். இந்த சேவை விரைவில் பிற சமூக வலைத்தளங்களிலும் கிடைக்கும் என நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா கூறியுள்ளது.
என்ன பரிவர்த்தனை புகார்கள் எல்லாம் அளிக்கலாம்?
டிபிட் கார்டு, கிரெடிட் கார்டு, யுபிஐ, என்.இ.எப்.டி, ஆர்.டி.ஜிஎஸ், ஐ.எம்.பி.எஸ், பிபிஐ வாலெட், ஏடிஎம், மொபைல் வங்கி சேவை, இணையதள வங்கி சேவைகளில் ஏற்படும் பரிவர்தனை குளறுபடிகளை எல்லாம் டிஜி சாத்தி சேவை மூலம் புகார் அளிக்கலாம்.
இணையதளம்
டிஜி சாத்தி சேவையை www.digisaathi.info இணையதளம் சென்றும் புகார் அளிக்கலாம். மேலும் அதே இணையத்தில் உள்ள சாட் அசிஸ்டன்ஸ் சேவை உதவியுடனும் புகார் அளிக்க வழங்கப்பட்டுள்ளது.
இலவச அழைப்பு எண்
14431, 1800 891 3333 என்ற எண்களைத் தொடர்புகொண்டும் டிஜிசாத்தி சேவையில் புகார் அளிக்க முடியும். அதில் இப்போது புதிதாக +91 892 891 3333 என்ற வாட்ஸ்அப் புகார் சேவையும் இணைந்துள்ளது.
மொழி
டிஜி சாத்தி சேவை தற்போதைக்கு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. பரிவர்த்தனை குறித்த புகார்களை வங்கிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்றால் அதற்கான தொடர்பு எண்களையும் டிஜி சாத்தி வழங்கும்.
யுபிஐ
இந்தியாவில் செய்யப்படும் சில்லறை பரிவத்தணைகளில் 60 சதவீதம் யுபிஐ செயலிகள் மூலமாகத்தான் நடைபெறுகிறது. அதில் 75 சதவீதம் 100 ரூபாய்க்கும் குறைவான தொகை கொண்ட பரிவத்தனைகள். மார்ச் மட்டும் யுபிஐ செயலிகள் மூலம் 9.60 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளது. வரும் மாதங்களில் இது தொடர்ந்து அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
NPCI Launched 24×7 WhatsApp Helpline Number To Complain UPI Payment Glitch
NPCI Launched 24×7 WhatsApp Helpline Number To Complain UPI Payment Glitch | கூகுள் பே, போன் பே, பேடிஎம்-ல் பேமெண்ட் குளறுபடியா? கவலை வேண்டாம்? Whatsapp-ல் புகார் அளிப்பது எப்படி?