கொத்தளிக்கும் கொழும்பு இலங்கையை நோட்டமிட்ட இந்திய கடற்படை அதிகாரிகள் (Video)



இந்தியா தொடர்ச்சியாக இலங்கைக்கு நிதியுதவிகளை வழங்கிவருகின்றது. ஏன் இந்தியா தற்போதைய அரசை காப்பாற்ற முன் வருகின்றதா என்ற கேள்வி இதன்போது எழுந்தது.

இதற்கு கருத்து தெரிவித்த இந்திய தூதுவர், 

“ நாங்கள் இலங்கைக்கு கொடுக்கும் நிதியுதவிகளோ பொருளாதார உதவிகளோ எமது புகோள அரசியலின் பாதுகாப்பிற்கே தவிர இந்த அரசை பாதுகாப்பது எமது நோக்கமல்ல என்று. ஆனால் இது உண்மையில்லையென இராணுவ ஆய்வாளர் ஆரூஸ் தெரிவித்துள்ளார்.

எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது “இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மருந்துவ உதவி பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டது. அதிலும் கூட பல்வேறு சர்ச்சைக்குரிய விடயங்கள் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் எமது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், 

மருத்துவ உபகரணங்களை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதோடு அதனை 170 இந்திய கடற்படை வீரர்கள் வந்தார்கள். இதனை தென்னிலங்கையில் இந்தியா இலங்கையை நோட்ட பார்க்க வந்த ஒரு நடவடிக்கையாகவே பார்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.     

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையின் பின்புலத்தில் இந்தியாவின் செயற்பாடுகள் குறித்தும் இதன்போது அவர் கருத்து தெரிவித்துள்ளார்.  இது தொடர்பிலான முழுமையான தகவல்களை இவ் நேர்காணலில் காணலாம்.      



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.