ஈக்வடார் நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் 43 கைதிகள் உயிரிழந்து உள்ளனர்.
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் உள்ள சிறைச்சாலைகளில் அடிக்கடி கைதிகள் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் நடந்து வருகிறது. தலைநகர் குய்டோவில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் சாண்டோ டொமிங்கோ டிலாஸ் கொலராடோசில் உள்ள பெல்லாவிஸ்டா சிறைச்சாலையில், இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது. அவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு பயங்கர கலவரம் வெடித்தது.
இந்த மோதலில் 43 கைதிகள் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். கலவரத்தில் காயம் அடைந்த கைதிகள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
என் உயிரை காப்பாத்துங்க; கடற்படை தளபதியிடம் சரண்டரான ராஜபக்சே!
இந்த கலவரத்தை பயன்படுத்தி 200-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையில் இருந்து தப்பினர். அவர்களில் பெரும்பாலானோரை போலீசார் மடக்கி பிடித்தனர். நீண்ட போராட்டத்துக்கு பிறகு கலவரத்தை போலீசார் அடக்கினர். இது குறித்து காவல் துறை தலைவர் பாஸ்டோ சலினாஸ் கூறும்போது, ‘தப்பி ஓடிய கைதிகளில் 112 பேர் பிடிபட்டனர். 108 பேர் தப்பி ஓடி விட்டனர். அவர்களை தேடி வருகிறோம்’ என்றார்.