சென்னையில் உருவாகும் புதிய வர்த்தகம்..!

இந்தியாவில் பழைய கார், பைக், கனரக வாகனங்களைப் பயன்படுத்துவதைக் குறைக்க மத்திய அரசு ஸ்கிராபேஜ் திட்டத்தை அமலாக்கம் செய்து விரைவில் கட்டாயமாக்க காத்திருக்கும் நிலையில் விமானப் போக்குவரத்துத் துறையிலும் இதேபோன்ற வர்த்தகம் உருவாகியுள்ளது.

அதுவும் நம்ம சென்னையில் இப்பிரிவு வர்த்தகம் சூடுபிடித்துள்ள நிலையில், இத்துறை வர்த்தகத்திற்கு ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சென்னை ஹப் ஆக மாறவும் வாய்ப்பு உள்ளது.

வாராக்கடன் அதிகரிப்பு.. 600 கிளைகளை மூடும் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா!

 விமானப் போக்குவரத்து

விமானப் போக்குவரத்து

விமானப் போக்குவரத்துத் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், புதிய விமானங்கள், அதிநவீன விமானங்களை முன்னணி நிறுவனங்கள் அடுத்தடுத்து வாங்கி வரும் நிலையில், நீண்ட காலமாகப் பயன்பாட்டில் இருக்கும் விமானங்கள் அதிகளவில் கைவிடப்பட்டு வருகிறது.

கைவிடப்பட்ட விமானங்கள்

கைவிடப்பட்ட விமானங்கள்

இப்படிக் கைவிடப்பட்ட விமானங்களில் இருந்து முக்கியமான உதிரிப் பாகங்களைத் தனியாகப் பிரித்து மறுசீரமைப்புச் செய்யப்படும் விமானங்களில் பயன்படுத்தவும், அதை உலகம் விற்பனை செய்யவும் தற்போது வர்த்தக வாய்ப்பு உருவாகியுள்ளது.

 சென்னை
 

சென்னை

இப்பிரிவில் மிகப்பெரிய அளவிலான வர்த்தகம் வாய்ப்பு உள்ளது எனச் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மெயின்டனன்ஸ், ரிப்பேர் மற்றும் ஆப்ரேஷன்ஸ் நிறுவனமான நேனோ ஏவியேஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட் தலைவர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

ஜெட் ஏர்வேஸ்

ஜெட் ஏர்வேஸ்

ஜெட் ஏர்வேஸின் போயிங் 777 விமானத்தை இந்தியாவிலேயே முதன் முறையாக டிஸ்மேன்டில் செய்யப்பட்டு உள்ளது. இதை நேனோ ஏவியேஷன் இந்தியா செய்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை சென்னையில் ஏழு விமானங்களைப் பிரித்துள்ள நிலையில் தற்போது நாடு முழுவதும் பல்வேறு ஆர்டர்கள் குவிந்து வருவதாகத் தெரிவித்துள்ளார் பாண்டியன்.

 செலவைக் குறைப்பு

செலவைக் குறைப்பு

கைவிடப்பட்ட விமானங்களில் இருந்து எடுக்கப்பட்ட மற்றும் செயலில் உள்ள வணிக விமானங்களில் நிறுவப்பட்ட பயன்படுத்தப்பட்ட சர்வீசபிள் மெட்டீரியல்கள் (USMs), பராமரிப்பு செலவைக் குறைக்கும் காரணமாக உலகளவில் பிரிவுக்கு அதிகளவிலான டிமாண்ட் உருவாகியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Chennai may become hub for dismantling aircraft parts soon

Chennai may become hub for dismantling aircraft parts soon சென்னையில் உருவாகும் புதிய வர்த்தகம்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.