உலகின் முன்னணி வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கும் வேளையில் இதற்கான வர்த்தகம் உருவாகியுள்ளது.
இதன் காரணமாக அடுத்தடுத்து பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்க அதிகப்படியான முதலீட்டைச் செய்து வருகிறது.
இப்பிரிவு முதலீட்டில் டாடா மோட்டார்ஸ், ஓலா முன்னோடியாக இருக்கும் நிலையில் தற்போது அசோக் லேலண்ட் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.
கிரிப்டோகரன்சி சந்தையில் ஏன் இந்த மோசமான சரிவு.. முதலீட்டாளார்கள் கவலை!
அசோக் லேலண்ட்
கனரக வாகனங்கள், சரக்கு போக்குவரத்து வாகனங்களின் தயாரிப்புக்கும், விற்பனையிலும் முன்னோடியாக இருக்கும் அசோக் லேலண்ட், எலக்ட்ரிக் வாகனங்களுக்காக உருவாக்கப்பட்ட ஸ்விச் மொபிலிட்டி நிறுவனத்தின் மூலம் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பதற்காகப் புதிய தொழிற்சாலையை அமைக்க உள்ளது.
ஸ்விச் மொபிலிட்டி நிறுவனம்
இப்புதிய எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலை தென்னிந்தியாவில் அமைக்கப்படும் என்று உறுதியான நிலையில், சென்னையில் அமைக்கப்படுவது குறித்து உறுதிப்படுத்தப்படாத தகவல் ஸ்விச் மொபிலிட்டி நிறுவனத்தில் வெளியாகியுள்ளது.
சென்னை, ஓசூர்
அசோக் லேலண்ட் ஏற்கனவே சென்னை, ஓசூர் ஆகிய பகுதிகளில் தொழிற்சாலைகளை வைத்துள்ள நிலையில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தொழிற்சாலையும் தமிழ்நாட்டில் தான் அமைக்கும் என்பது கிட்டதட்ட 90% உறுதியாகியுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை.
இதன் மூலம் அசோக் லேலண்ட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை அதிகரிக்கும்.
ஸ்பெயின்
ஸ்விச் மொபிலிட்டி நிறுவனம் ஸ்பெயின் நாட்டில் ஏற்கனவே ஜீரோ கார்பன் பொது மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்து வாகனங்களைத் தயாரிப்பதற்காக 3000 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை அமைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
600 எலக்ட்ரிக் பஸ்
ஸ்விச் மொபிலிட்டி நிறுவனம் துவங்கப்பட்டு ஒரு வருடம் முடிந்த நிலையில் 600 எலக்ட்ரிக் பஸ்களுக்கான ஆர்டரை கைப்பற்றியுள்ளது என ஸ்விச் மொபிலிட்டி நிறுவன சிஇஓ மகேஷ் பாபு தெரிவித்துள்ளார்.
5 வருடம்
அடுத்த 5 வருடத்தில் 5000 பஸ் அல்லது 15000 சிறிய சரக்கு போக்குவரத்து வாகனங்களை விற்பனை செய்வதற்கான வர்த்தக இலக்கை கொண்டு இயங்க அசோக் லேலண்ட்-ன் ஸ்விச் மொபிலிட்டி நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
Ashok Leyland invest Rs 1,000 crore for New electric vehicle plant may setup in Chennai
Ashok Leyland invest Rs 1,000 crore for New electric vehicle plant may setup in Chennai சென்னையில் ரூ.1000 கோடி முதலீடு செய்யும் அசோக் லேலண்ட்.. மாபெரும் EV திட்டம்..!