வளர்ப்பு தந்தையை கணவனுடன் கொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம், தல்லாகுளம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணாராம். இவரின் வளர்ப்பு மகள் நிவேதா ஹரிஹரன் என்பவரை காதலித்து வீட்டை விட்டு சென்று மணந்து கொண்டார். இதனால், தந்தைக்கும் மகளுக்கும் இடையில் மனஸ்தாபம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில்ம் நிவேதா சொத்தில் பங்குகேட்டுள்ளார்.அதற்கு கிருஷ்ணராஜ் மறுக்கவே ஆத்திரமடைந்த நிவேதா கணவர் மற்றும் அவரது நண்பர்களுடன் இணைந்து கிருஷ்ணராஜை கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் இந்த நிவேதா மற்றும் அவரது கணவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.