ஜப்பான் அழிந்துவிடும்.. முன்கூட்டியே எச்சரிக்கும் எலான் மஸ்க்..!

சர்வதேச பொருளாதாரம், தொழில்நுட்பம், உற்பத்தியில் ஜப்பான் நாடு முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில் எலான் மஸ்க் ஜப்பான் குறித்து வெளியிட்டுள்ள எச்சரிக்கை உலக நாடுகள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பான் நாட்டுக்கு அப்படி என்ன பிரச்சனை.. எலான் மஸ்க் எச்சரிக்கை விடுக்கும் அளவிற்குத் தற்போது என்ன நடந்துள்ளது..?

சென்னையில் ரூ.1000 கோடி முதலீடு செய்யும் அசோக் லேலண்ட்.. மாபெரும் EV தொழிற்சாலை..!

ஜப்பான்

ஜப்பான்

ஜப்பானின் மக்கள்தொகை எண்ணிக்கையில் வரலாற்றிலேயே மிகப்பெரிய சரிவைக் எதிர்கொண்டு உள்ளது. 2021 ஆம் ஆண்டின் தரவுகள் அடிப்படையில் அந்நாட்டு மக்கள் தொகை 644,000 குறைந்து 125.5 மில்லியனாக உள்ளது.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

இது கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாகக் கடுமையான எல்லை கட்டுப்பாடுகளால் வெளிநாட்டு மக்களின் எண்ணிக்கை சரிவாலும் இந்த நிலை உருவாகியுள்ளது, ஆனால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஏற்கனவே ஜப்பான் வயதானவர்கள் அதிகம் உள்ள நாடாக இருக்கும் நிலையில் தற்போது மக்கள் தொகையும் சரிவு அந்நாட்டின் பொருளாதார அடித்தளத்தை ஆட்டியுள்ளது.

644,000 சரிவு
 

644,000 சரிவு

அக்டோபர் 1 ஆம் தேதியின் படி ஜப்பான் மக்கள்தொகை 125,502,000 ஆக உள்ளது. இது கடந்த ஆண்டை விடவும் 644,000 குறைவும் என்பது மட்டும் அல்லாமல் 11 ஆண்டுகளாக மக்கள் தொகை எண்ணிக்கை சரிந்து வருவது பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

வரலாற்றுச் சரிவு

வரலாற்றுச் சரிவு

ஜப்பான் 1950 முதல் வருடாந்திர மக்கள் தொகை கணக்கை நிர்வாகம் செய்து வரும் நிலையில் 2021ஆம் அண்டில் சரிந்த 644,000 தான் மிகவும் மோசமான சரிவு என ஜப்பான் நாட்டின் உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதைத் தான் எலான் மஸ்க் எச்சரித்துள்ளார்.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

ஜப்பான் நாட்டின் ஆபத்தான நிலை வெளிப்படையாகத் தெரிகிறது. இறப்பு விகிதத்தைக் காட்டிலும், பிறப்பு விகிதம் அதிகரிக்க ஜப்பான் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் ஜப்பான் அழியும் நிலை வரலாம். ஜப்பானின் இழப்பு உலக நாடுகளுக்குப் பெரும் இழப்பு என எலான் மஸ்க் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பிறப்பு, இறப்பு

பிறப்பு, இறப்பு

ஜப்பானில் வசிக்கும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை 25,000 குறைந்து 2,722,000 ஆக உள்ளது. ஜப்பான் குடிமக்கள் மொத்தம் 122,780,000, முந்தைய ஆண்டை விட 618,000 குறைவு. 2021 ஆம் ஆண்டில் ஜப்பான் நாட்டின் 831,000 குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கை 14.4 லட்சமாக உள்ளது.

சீனா

சீனா

சமீபத்தில் இதே பிரச்சனையின் காரணமாகச் சீனா தனது குழந்தை பெற்றுக்கொள்ளும் விதிகளைத் தளர்த்தியது. இதற்கு ஏற்றார் போல் கல்வி செலவுகள், விலைவாசியைச் சீனா குறைக்க வழிவகைச் செய்து மக்களை 2 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள ஊக்குவித்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Elon Musk warns Japan ‘Cease to Exist’; Japan’s population record drop

Elon Musk warns Japan ‘Cease to Exist’; Japan’s population record drop ஜப்பான் அழிந்துவிடும்.. முன்கூட்டியே எச்சரிக்கும் எலான் மஸ்க்..!

Story first published: Tuesday, May 10, 2022, 15:01 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.