தங்கம் விலை மீண்டும் சரிவு.. இது வாங்க சரியான நேரமா.. இனியும் குறையுமா?

தங்கம்(gold) விலையானது இன்றும் 2வது நாளாக சற்று குறைந்தே காணப்படுகின்றது. இது முதலீட்டாளர்கள், தங்க ஆர்வலர்கள் மத்தியில் சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக வந்துள்ளது.

இது குறைந்த விலையில் வாங்க நல்ல வாய்ப்பா? அல்லது இனியும் தங்கம் விலை குறையுமா? வெள்ளி விலை நிலவரம் என்ன?

சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலவரம் என்ன?இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் என்ன?கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

சரிவில் இருந்து மீண்ட சென்செக்ஸ்.. 25 புள்ளிகள் உயர்வு..!

தங்கம் விலை குறைவு

தங்கம் விலை குறைவு

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது பெரியளவில் மாற்றமின்றி தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது. எனினும் இன்று ஆபரணத் தங்கத்தின் விலையானது சரிவில் காணப்படுகின்றது. இது தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவில் காணப்படுகின்றது. ஆக இது வாங்க நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையிலும் தங்கம் விலையானது தடுமாற்றத்தில் காணப்பட்டாலும், சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

தொடரும் பிரச்சனை

தொடரும் பிரச்சனை

ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனையானது தொடர்ந்து இன்று வரையில் தொடர்ந்து கொண்டே உள்ளது. இது மேற்கொண்டு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது தங்கம் விலையில் அதிக ஏற்ற இறக்கத்தினை கொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதல் மத்தியில் பல்வேறு நாடுகளும் ரஷ்யா மீது பல்வேறு தடைகளை விதித்து வருகின்றன. இது ரஷ்யாவிற்கு மட்டும் பாதிப்பினை ஏற்படுத்தாது. உலக நாடுகளின் சப்ளை சங்கியிலும் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்க உச்சம்
 

பணவீக்க உச்சம்

ஏற்கனவே ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை காரணமாக பணவீக்க விகிதமானது எகிறியுள்ளது. இந்த நிலையில் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தினை கட்டுக்குள் கொண்டு வர வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளன. இதற்கிடையில் தொடர்ந்து அதிகரித்து வரும் தடையால், இனியும் பணவீக்கம் அதிகரிக்கலாம் என்ற அச்சமே இருந்து வருகின்றது.இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாலர் மதிப்பு உச்சம்

டாலர் மதிப்பு உச்சம்

அமெரிக்காவின் மத்திய ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது பணவீக்கத்தினை கட்டுக்குள் வைக்க வட்டி விகிதத்தினை அதிரடியாக கடந்த வாரத்தில் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்தது. அதன் பலனாக அமெரிக்க டாலரின் மதிப்பும் தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றது. இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. எப்படியிருப்பினும் அரசியல் பதற்றங்கள், பொருளாதார வளர்ச்சி குறித்தான அச்சம் தங்கம் விலையினை அதிகளவில் சரியாமல் தடுத்துள்ளது.

கொரோனாவின் தாண்டவம்

கொரோனாவின் தாண்டவம்

தற்போது சீனா கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வருகின்றது எனலாம். கொரோனாவினை கட்டுக்குள் கொண்டு வர அந்நாடு கடுமையான கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகித்தத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே லாக்டவுன் காரணமாக டெஸ்லா உள்பட பல்வேறு நிறுவனங்களும் தங்களது உற்பத்தியினை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. இதன் காரணமாக உற்பத்தியிலும் மோசமான தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதரவான காரணிகள்

ஆதரவான காரணிகள்

மொத்தத்தில் தங்கத்தின் விலை குறைய சில காரணிகள் ஆதரவாக இருந்தாலும், பல காரணிகளும் எதிராகவே உள்ளது. குறிப்பாக தங்கத்தின் தேவை, அரசியல் பதற்றம், பொருளாதார வளர்ச்சி விகித அச்சம், பணவீக்கம் என பல காரணிகளும் தங்கத்திற்கு ஆதரவாகவே உள்ளன. ஆக தங்கம் விலை குறையும்போது வாங்கி வைக்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

முதலீடு செய்வது சரியா?

முதலீடு செய்வது சரியா?

தங்கத்தில் எப்போதுமே போர்ட்போலியோவில் 5 – 10% இருப்பது நல்லது. எப்போதுமே முதலீடுகளை பிரித்து செய்வது நல்லது. எப்படியிருப்பினும் தங்கமானது நீண்டகால நோக்கில் நல்ல லாபம் கொடுக்கும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

நிபுணர்கள் பணவீக்கத்தினை குறைக்க வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. இது தற்காலிகமாக முதலீடுகள் வெளியேற வழிவகுக்கும். ஆனால் இன்று வரையில் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதமானது கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு, ரஷ்யா உக்ரைன் போரால் மீண்டும் பின் தங்க ஆரம்பித்துள்ளது. ஆக நிச்சயம் இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸுக்கு 3.43 டாலர்கள் அதிகரித்து, 1862.04 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச, குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று தடுமாற்றம் கண்டாலும், நீண்டகால வாங்க நினைப்பவர்கள் குறைந்த பின்னர் வாங்கி வைக்கலாம்.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

தங்கம் விலையை போலவே வெள்ளியின் விலையும் 1% மேலாக அதிகரித்தே காணப்படுகின்றது.இது தற்போது அவுன்ஸூக்கு 1.11% அதிகரித்து, 22.058 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச, குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை. எனினும் மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வாங்க சரியான வாய்ப்பு எனலாம்.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையினை பொறுத்தவரையில் தங்கம் விலையானது, சர்வதேச சந்தையின் எதிரொலியாக சற்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 24 ரூபாய் குறைந்து, 50,983 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று தொடக்கத்தில் சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம். ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கி வைக்கலாம்.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

வெள்ளியின் விலையும் சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது தற்போது கிலோவுக்கு 378 ரூபாய் அதிகரித்து, 61,875 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கேப் அப் ஆகீ மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலையானது தற்போது தடுமாறினாலும், நீண்டகால வாங்க நினைப்பவர்கள் வாங்கி வைக்கலாம்.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்திருந்தாலும், ஆபரணத் தங்கத்தின் விலையும் சற்று சரிவில் காணப்படுகின்றது. தற்போது சென்னையில் கிராமுக்கு 19 ரூபாய் குறைந்து, 4840 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 152 ரூபாய் குறைந்து, 38,720 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலை சற்று குறைந்தே காணப்படுகிறது. இது தற்போது கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து, 5280 ரூபாயாகவும், இதுவே 8 கிராமுக்கு 160 ரூபாய் குறைந்து, 42,240 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 52,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை

வெள்ளி விலை

இதே சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது இதுவரையில் பெரியளவில் மாற்றம் காணவில்லை. இன்று கிராமுக்கு 50 பைசா குறைந்து, 66 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 660 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து, 66,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

சர்வதேச தங்கம் மற்றும் வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் தடுமாறினாலும், நீண்டகால வாங்க நினைப்பவர்கள் வாங்கி வைக்கலாம். இது பணவீக்கம், சீனாவின் கொரோனா தாக்கம், ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை உள்ளிட்ட பல காரணிகள் விலை ஏற்றம் காண முக்கிய காரணிகளாக அமையலாம். இதே ஆபரணத் தங்கத்தினை பொறுத்தவரையில் தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold price on May 10th, 2022: gold prices today fall on form strong bond yields, is it a right time to buy?

gold price on May 10th, 2022: gold prices today fall on form strong bond yields, is it a right time to buy? / தங்கம் விலை மீண்டும் சரிவு.. இது வாங்க சரியான நேரமா.. இனியும் குறையுமா?

Story first published: Tuesday, May 10, 2022, 11:40 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.