தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த 5ம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த 6ம் தேதியும் தொடங்கியது. கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், மாணவ – மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றார். கொரோனா பரவல் காரணமாக, பள்ளிகளுக்கு அதிகளவில் விடுமுறை விடப்பட்டதால், தற்போது தேர்வு மே மாதம் நடைபெற்று வருகிறது.
இதுவரை தமிழ் மொழி பாட தேர்வு நடந்து முடிந்துள்ளது. ஒவ்வொரு தேர்விற்கும் அதிக அளவில் விடுமுறை இடைவெளி கொடுக்கப்பட்டு தேர்வுகள் இந்த மாதம் இறுதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ – மாணவிகளுக்கு இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்கி வருகின்ற 31ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வினை 8,83,884 மாணவ – மாணவிகள் எழுதுகின்றனர். 4 லட்சத்து 33 ஆயிரத்து 684 மாணவர்களும், 4 லட்சத்து 50 ஆயிரத்து 198 மாணவிகளும் எழுத உள்ளனர். தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 119 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.