டெஸ்லா நிறுவனம் தங்களது கார்களின் விற்பனையை இந்தியாவில் தொடங்க வேண்டும் என இந்தியர்கள் கோரும் நிலையில், அந்நிறுவன சி.இ.ஓ. எலன் மஸ்க் மற்றும் அவரது தாயாரான மாயே மஸ்க் ஆகியோர் தாஜ்மகால் குறித்த தங்களது நினைவுகளை பகிர்ந்துள்ளனர்.
தான் 2007ஆம் ஆண்டில் தாஜ்மகாலை கண்டு ரசித்ததாகவும், உண்மையிலேயே அது உலக அதிசயம் தான் என்றும் எலன் மஸ்க் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
அதனை சுட்டிக்காட்டி பதிவிட்ட மாயே மஸ்க், 1954ஆம் ஆண்டில், எலான் மஸ்க்கின் தாத்தா, பாட்டி ஆகியோர் தென்னாப்பிரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியா செல்லும் வழியில் தாஜ்மஹாலை பார்த்து ரசித்தததாக குறிப்பிட்டார்.
மேலும், தானும் தாஜ்மகாலை பார்க்க சென்றதாக கூறிய அவர் அது அழகானது என தெரிவித்தார்.