வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லக்னோ,- தாஜ் மஹாலில் மூடப்பட்டுள்ள 22 அறைகளை திறந்து ஆய்வு செய்ய கோரிய மனுவை அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளை விசாரணைக்கு ஏற்றது.
உத்தர பிரதேசத்தில் ஆக்ராவில் உலக புகழ் பெற்ற தாஜ் மஹால் ஒரு காலத்தில் ‘தேஜா மகாளயா’ என்ற பெயரில் சிவன் கோயிலாக இருந்ததாகவும் பின்னர் தாஜ்மஹால் என மாற்றப்பட்டதாக ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தோர் கூறுகின்றனர். இதற்கு வரலாற்று ஆசிரியர்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அங்குள்ள 22 அறைகளுக்குள் பழமையான ஹிந்து தெய்வங்களின் சிலைகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் கடந்த 9-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தாஜ்மஹாலில் சிவன் கோயில் இருந்ததற்காகன ஆதாரங்களை கண்டறிய அங்குள்ள மூடிவைக்கப்பட்டுள்ள 22 அறைகளில் ஹிந்து தெய்வங்களின் சிலைகள் உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த அறைகளின் கதவுகள் பூட்டப்பட்டு உள்ளது என, இந்திய தொல்லியல் துறை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளது.
மூடப்பட்டுள்ள அறைகளுக்குள் என்ன உள்ளது என்பதை அறிய உண்மை கண்டறியும் குழு ஒன்றை அமைத்து, மூடப்பட்டுள்ள அறைகளை திறந்து ஆய்வு செய்ய, தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இன்று நடந்த விசாரணையில் மனுவை கோர்ட் ஏற்றுக்கொண்டதாகவும், வரும் 12-ம் தேதி விசாரணைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் விசாரணைக்கு வர உள்ளதால், இந்து மகாசபையில் இதை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் விதத்தில் தாஜ்மஹால் முன் பொதுமக்களுக்கு லட்டு வழங்கினர்.
Advertisement