திருச்சியில் மின்சாரம் பாய்ந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருச்சியில் டோல்கேட் மேனகா நகர் பகுதியை உள்ள டிரான்ஸ்பார்மரை ஒட்டி பிரமாண்ட விளம்பர பேனர் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று இரவு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இந்த பலத்த காற்றினால் அந்த விளம்பர பேனர் கீழே விழுந்துள்ளது. இன்று மீண்டும் அதே இடத்தில் விழுந்த பேனரை வைக்கும் பணியில் 3 பேர் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது பக்கத்தில் இருந்த டிரான்ஸ்பார்மரில் பேனர் உரசியதால் மின்சாரம் பாய்ந்ததில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மற்ற இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது அதில் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அனுமதி இல்லாமல் விளம்பர பேனர் வைத்த நபரை தேடிவருகின்றனர்.