தைவானில் நிலநடுக்கம்| Dinamalar

தைபே : தைவான் நாட்டில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

கிழக்காசிய நாடான தைவானில் நேற்று கிழக்கு கடற்கரையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவாகியுள்ளது. தலைநகர் தைபேயில் கட்டடங்கள் குலுங்கின. ஆனால், சேதமோ உயிரிழப்போ ஏற்படவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.அதேபோல், தைவானில் இருந்து 108 கி.மீ., துாரத்தில் உள்ள யோனாகுனி தீவில் 70 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.