நாட்டை தீக்கிரையாக்கிய மகிந்தவின் விசுவாசிகள் – நேற்றை வன்முறை சம்பவம் குறித்து ஒரு பார்வை (Photos)


முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் சனத் நிஷாந்த ஆகியோர் தலைமையிலான அவரது நெருங்கிய விசுவாசிகள் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்களைத் தூண்டிவிட்டு, ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் இறுதி முயற்சியாக அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தாக்கத் தூண்டினர்.

கொழும்பில் காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் நேற்று தாக்கிய போது, ​​நாடளாவிய ரீதியில் வன்முறைகள் அதிகரித்தன.

குழப்பத்தை உருவாக்கிய பின்னர், பிரதமர் ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கொடுத்தார். அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடல் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலின் போது குறைந்தது 223 பேர் காயமடைந்துள்ளனர்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்களுடன் பிரதமர் மகிந்த ராஜபக்ச நேற்று காலை அலரி மாளிகையில் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார். இதனை தொடர்ந்து இந்த சம்பவங்கள் ஆரம்பமாகியுள்ளன.

மகிந்த ராஜபக்சவை பதவி விலக வேண்டாம் என ஆதரவாளர்கள் வலியுறுத்தினர். நாட்டின் சார்பாக எந்த தியாகத்தையும் செய்வேன் என்று கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச தனது ஆதரவாளர்களிடம் உறுதியளித்தார்.

இந்த சந்திப்பு தொடர்பினா காணொளிகளின் அடிப்படையில், கூட்டத்திற்குப் பிறகு ‘கோட்ட கோ கம’வுக்குச் செல்லுமாறு ஆதரவாளர்கள் ஒருவரையொருவர் வற்புறுத்துவதைக் காண முடிந்தது.

நாட்டை தீக்கிரையாக்கிய மகிந்தவின் விசுவாசிகள் - நேற்றை வன்முறை சம்பவம் குறித்து ஒரு பார்வை (Photos)

பின்னர் அவர்கள் அலரிமாளிகைக்கு முன்பாக ‘மைனா கோ கம’ என்ற பெயரில் அமைக்கப்பட்டிருந்த போராட்ட தளத்தில் அங்கிருந்த அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கினர்.

அத்துடன், அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த குடிசைகளை உடைக்கத் தொடங்கினர்.

அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் ராஜபக்ச ஆதரவாளர்களால் தாக்கப்பட்டனர். பல பொருட்கள் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்களால் தீவைக்கப்பட்டன.

நாட்டை தீக்கிரையாக்கிய மகிந்தவின் விசுவாசிகள் - நேற்றை வன்முறை சம்பவம் குறித்து ஒரு பார்வை (Photos)

ஒரு சில புகைப்பட ஊடகவியலாளர்களும் பல சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டனர் மற்றும் இறுதியில் சம்பவ இடத்தில் இருந்தவர்களும் தாக்கப்பட்டனர்.

போராட்டக்காரர்கள் காவல்துறையின் தடுப்புகளை உடைத்து கோட்ட கோ கம போராட்ட இடத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் செஞ்சிலுவைச் சங்கம், செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் போராட்டக்காரர்களால் கட்டப்பட்ட குடிசைகளைத் தாக்கினர்.

போராட்டம் நடந்த இடத்தில் இருந்த நூலகத்தின் ஒரு பகுதியும் அழிக்கப்பட்டது. பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசிய போதிலும் வன்முறையை தடுக்க முடியவில்லை.

ராஜபக்சவுக்கு ஆதரவான குழுவினர் காலி முகத்திடலை நோக்கிச் சென்ற போது ஏற்பட்ட மோதலைத் தடுக்க பொலிஸார் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அமைதியான போராட்டத் தளங்கள் மீதான தாக்குதல்களால் ஆத்திரமடைந்த மக்கள், நாடு முழுவதும் வீதிகளில் இறங்கி, ராஜபக்ச ஆதரவு போராட்டக்காரர்களை ஏற்றிச் சென்ற பேருந்துகளையும் ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் சொத்துக்களையும் தாக்கத் தொடங்கினர்.

நாட்டை தீக்கிரையாக்கிய மகிந்தவின் விசுவாசிகள் - நேற்றை வன்முறை சம்பவம் குறித்து ஒரு பார்வை (Photos)

ராஜபக்ச ஆதரவு குழுவினரால் தூண்டப்பட்ட வன்முறைக்கு மக்கள் பதிலடியாக அவர்களைத் தாக்கினர். கொழும்பில் உள்ள பெய்ரா ஏரியில் குதித்த டஜன் கணக்கான ராஜபக்ச ஆதரவாளர்கள் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் தடுக்கப்பட்டனர்.

ராஜபக்சவின் கூட்டாளியான மஹிந்த கஹந்தகமவும் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டார். தாக்குதல் சம்பவம் தொடர்பில் தகவல் வெளியான பின்னர், ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கோட்ட கோ கமவிற்கு சென்றிருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த போதிலும், ஆர்ப்பாட்டக்காரர்களால் விரட்டியடிக்கப்பட்டனர்.

மேலும், ராஜபக்சவுக்கு ஆதரவான குழுவினரை ஏற்றிக்கொண்டு கொழும்புக்கு சென்ற பேருந்துகளும் தடுக்கப்பட்டு தாக்கப்பட்டன.

ஹம்பாந்தோட்டை மெதமுலனவில் உள்ள ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக வீடு எதிர்ப்பாளர்களால் தாக்கப்பட்டது. மெதமுலான ராஜபக்ச அருங்காட்சியகமும் தீ வைத்து எரிக்கப்பட்டது.

காமினி லொக்குகே, ராஜபக்சவுக்கு ஆதரவான குழுவை வழிநடத்திய சனத் நிஷாந்த, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, கலாநிதி ரமேஷ் பத்திரன, ஜானக திஸ்ஸகுட்டியாராச்சி, சாந்த பண்டார, கனக ஹேரத், நிமல் லான்சா, அனுஷா பாஸ்குவேல், பிரசன்ன ரணதுனக, காஞ்சன ரணதுனக, காமினி லொகுகே உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் வாகனங்கள் தீவைக்கப்பட்டன.

நாட்டை தீக்கிரையாக்கிய மகிந்தவின் விசுவாசிகள் - நேற்றை வன்முறை சம்பவம் குறித்து ஒரு பார்வை (Photos)

அலி சப்ரி ரஹீம் மற்றும் மொரட்டுவ மேயர் சமன் நந்த லால் ஆகியோரின் வீடுகளும் ஆத்திரமடைந்த எதிர்ப்பாளர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டன. நீர்கொழும்பில் உள்ள Avenra Gardens ஹோட்டலும் தாக்கப்பட்டது.

நிட்டம்புவ பிரதேசத்தில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுடன் ஏற்பட்ட மோதலில் ஈடுபட்ட ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவும் அவரது சாரதியும் தற்கொலை செய்து கொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தில் வந்த குழுவினால் சுடப்பட்ட மூவரில் ஒரு இளைஞர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வீரகெட்டிய பிரதேச சபைத் தலைவரின் இல்லத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.

மாலையில் அலரி மாளிகைக்குள் ஒரு கும்பல் அத்துமீறி நுழைய முற்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. கும்பலை கலைக்க பொலிஸார் பலமுறை கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அப்பகுதியில் ஏராளமான இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

வானை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

இந்த மோதல் சம்பவத்தை அடுத்து, மேல் மாகாணத்தில் உடனடியாக பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

எவ்வாறாயினும், கலவரம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, இரவு 7:00 மணி முதல் நாடளாவிய ரீதியில் பொது ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.  இதன்படி, நாளை வரை ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.