வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத்: பாக்.,கில் கோதுமை, சர்க்கரை தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் அந்நாட்டுக் குடிமக்கள் அவதியுற்று வருகின்றனர்.
பாகிஸ்தான் நாட்டில் சர்க்கரை தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. கைபர் பக்துன்வாலா பகுதிக்கு பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து வரவேண்டிய கோதுமை உரிய நேரத்தில் வராமல் போனதால் மக்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இன்றி தவித்தனர். இதன் காரணமாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முக்கிய உத்தரவு ஒன்றை இட்டுள்ளார். நாட்டில் சர்க்கரை தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதன் காரணமாக தற்காலிகமாக சர்க்கரை ஏற்றுமதியை நிறுத்த கூறியுள்ளார்.
மேலும் பதுக்கலில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். பணி நேரத்தில் வேலையை ஒழுங்காக செய்யாத ஊழியர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என்றார். ரம்ஜானை முன்னிட்டு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விலையை குறைக்க முன்னதாக பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டு இருந்தது.
அந்த நேரத்தில் கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அங்காடிகளில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதாக பாகிஸ்தான் குடிமக்கள் புகார் அளித்தனர். இதனைத்தொடர்ந்து பிரதமர் ஷெரீப் இதுகுறித்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Advertisement