பாமாயில் ஏற்றுமதி வரியை 50% குறைக்கும் மலேசியா, இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை குறையுமா?

மலேசியா விரைவில் பாமாயில் ஏற்றுமதி வரியை 50 சதவீதம் வரை குறைக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதால், இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை 3 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

சர்வதேசச் சந்தையில் சமையல் எண்ணெய் மீதான பற்றாக்குறை அதிகரித்து வரும் நிலையில், உலகின் இரண்டாம் மிகப் பெரிய பாமாயில் ஏற்றுமதி நாடான மலேஷியா ஏற்றுமதி வரியை குறைக்க முடிவு செய்துள்ளது.

சிறு முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய 3 ஐபிஓ-க்கள்.. என்னென்ன நிறுவனங்கள்.. எப்போது?

எவ்வளவு வரி குறையும்?

எவ்வளவு வரி குறையும்?

மலேசியாவில் இப்போது பாமாயில் ஏற்றுமதிக்கு 8 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. அதை தற்காலிக நடவடிக்கையாக 4 அல்லது 6 சதவீதமாகக் குறைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எப்போது இந்த வரி குறைப்பு இருக்கும்?

எப்போது இந்த வரி குறைப்பு இருக்கும்?

பாமாயிலை அதிகளவில் ஏற்றுமதி செய்யும் இந்தோனேசியா அங்கு ஏற்பட்ட எண்ணெய் தட்டுப்பாட்டால், பாமாயில் ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாகச் சர்வதேசச் சந்தையில் சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மலேஷாவின் இந்த எண்ணெய் விலை குறைப்பு ஜூன் மாதம் முதல் வரும் என கூறப்படுகிறது.

இந்தோனேசியா
 

இந்தோனேசியா

இந்தோனேசியா பாமாயில் ஏற்றுமதிக்குத் தடைவிதித்து இருந்தாலும், அங்கு அதைச் சேமிக்கத் தேவையான வசதிகள் அதிகளவில் இல்லை. எனவே விரைவில் மீண்டும் ஏற்றுமதியைத் தொடங்கும். அப்போது ஜூன் மாதம் இறுதியிலிருந்து சமையல் எண்ணெய் விலை குறையும் என கூறப்படுகிறது.

இப்போது மேலும் சாதகமாக மலேசியாவும் பாமாயில் ஏற்றுமதி வரியைக் குறைக்க முடிவு செய்துள்ளது.

இந்தியா

இந்தியா

இந்தியா தங்களது சமையல் எண்ணெய் நுகர்வுக்கு 55 சதவீதத்திற்கும் அதிகமாக இறக்குமதியைத் தான் நம்பி உள்ளது. சர்வதேச அளவில் சமையல் எண்ணெய்யை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 7.2 மில்லியன் டன் பாமாயிலை இந்தோனேசியாவிலிருந்தும், 5.4 மில்லியன் டன் பாமாயிலை மலேசியாவிலிருந்தும் இறக்குமதி செய்கிறது.

வரி குறைப்பு

வரி குறைப்பு

இந்திய அரசும் அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலை குறைப்பைச் சமாளிக்க கனோலா எண்ணெய், ஆலிவ் எண்ணெய், அரிசி தவிடு எண்ணெய் மற்றும் பாம் கர்னல் எண்ணெய் மீதுள்ள 35 சதவீத இறக்குமதி வரியை, 5 சதவீதமாகக் குறைக்க இந்திய அரசு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இது நடந்தால் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை பெரும் அளவில் குறையும் என கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Soon Malaysia may cut palm oil export tax upto 50% as global supply crisis

Soon Malaysia may cut palm oil export tax upto 50% as global supply crisis | பாமாயில் ஏற்றுமதி வரியை 50% குறைக்கும் மலேஷியா, இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை குறையுமா?

Story first published: Tuesday, May 10, 2022, 22:55 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.