தூத்துக்குடி மாவட்டத்தில், பாவம் பார்த்து வேலை கொடுத்த மூதாட்டியிடம் செயினை பறித்த நபரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.
கந்தசாமிபுரம் கிராமத்தில், சாப்பாட்டிற்கே கஷ்டப்படுவதாக கூறிய பார்த்தசாரதி என்பவனுக்கு, 80 வயது மூதாட்டியான வையம்மாள் விவிசாய கூலிவேலைகளை அளித்து, சம்பளம் கொடுத்து வந்துள்ளார்.
நள்ளிரவில், வீட்டின் பின்புற கதவை கழற்றி உள்ளே புகுந்த பார்த்தசாரதி, மூதாட்டி அணிந்திருந்த 3 சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடினான்.
அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மூதாட்டி போலீசாருக்கு தகவல் அளித்ததை அடுத்து பார்த்தசாரதியை கைது செய்த போலீசார், அவன் மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த தங்க செயினை மீட்டனர்.